SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நள்ளிரவு நாடகம்

2019-03-23@ 05:30:23

பாஜ ஆளும் மாநிலங்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருப்பதில்லை. அதுபோன்ற பரபரப்பில் கடந்தவாரம் சிக்கியது கோவா மாநிலம். அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானதும் கோவாவில் பாஜ ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. மொத்தமுள்ள 40 இடங்களில்  12 எம்எல்ஏக்களை பெற்றுள்ள பாஜ, மகாராஷ்டிரவதி கோமண்டக் கட்சி  3, கோவா முன்னணி 3, சுயேட்சைகள் 3 என 9 உறுப்பினர்களை கூட்டு சேர்த்து 21 பேரவை உறுப்பினர் பலத்துடன் ஆட்சி செய்கிறது. காங்கிரஸ் 15 உறுப்பினர்களை பெற்றுள்ளது. 4 இடம் காலியாக உள்ளது.  
 முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் தகனம் செய்யப்பட்டதும், ஆளுநரை சந்தித்து பெரும்பான்மை பலமுள்ள காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.  ஆனால், அன்று நள்ளிரவில் அவசரமாக புதிய முதல்வராக பாஜவின் பிரமோத் சாவந்த் பதவியேற்றார். கூட்டணி கட்சியில் இருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மறுநாளே பேரவையில் பெரும்பான்மையை  நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது 36 பேர் கொண்ட பேரவையில் பாஜவுக்கு  ஆதரவாக 20 பேரும், எதிராக 15 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து கோவாவில் பாஜ தனது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.

பாஜவின் இது போன்ற நள்ளிரவு நாடக நடவடிக்கையை ஜனநாயகத்தின் கோர வடிவம் என்று சிவசேனா தாக்கியுள்ளது. காலை வரை பொறுத்திருந்தால் பாஜ ஆட்சி கவிழ்ந்து இருக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல் கூட்டணி கட்சிகளை சேர்ந்த இருவருக்கு துணை முதல்வர் ஆசை காட்டி தனது அதிகாரத்தை பாஜ நிலைநிறுத்தி கொண்டுள்ளது வெட்கக்கேடானது என்று கூறியுள்ள சிவசேனா, பாஜ ஆளும் மாநிலங்களில் துணை முதல்வர்களை நியமிக்கமாட்டோம் என்று கூறினர். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு கூட துணை முதல்வர் பதவி வழங்கவில்லை. பின்னர் பீகார், உபி, ஜம்மு காஷ்மீரில் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. கோவாவிலும் இது அரங்கேற்றப்பட்டுள்ளது. பாஜ கட்சிக்கு கொள்கை என்பதே கிடையாது. தங்களுக்கு சாதகமாக எந்த விதிகளையும் மீறுவார்கள். அதிக இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போய்விடக்கூடாது என்று பாஜவினர் சூழ்ச்சி செய்துள்ளனர். ஆனால், கர்நாடகாவில் காங்கிரசார் மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்ததை விமர்சித்தனர். இது பாஜவின் அரசியல் நிலைப்பாட்டில் முரண்பாடாகவே கருதப்படுகிறது. மாநிலத்துக்கு, மாநிலம் அரசியல் நிலவரம் மாறுபட்டாலும் தேசிய அளவில் தங்கள் அதிகாரத்தை யார் தக்கவைத்து கொள்வார்கள் என பரபரப்பு மக்களவை தேர்தலில் தொற்றிக்கொண்டுள்ளது மறுக்கமுடியாத உண்மையாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்