SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை, தஞ்சை, ஈரோட்டில் நடந்த பறக்கும் படை சோதனையில் 6.80 கோடி பறிமுதல்

2019-03-23@ 05:27:49

மதுரை: மதுரை, தஞ்சை, ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 6.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு  உரிய ஆவணங்கள் இல்லாத பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மதுரை யானைக்கல்லில் நேற்று பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, இரும்பு பெட்டிகளில் 4 கோடியே 50 லட்சம் இருப்பதும், அதனை திருச்சி தில்லை நகரிலுள்ள ஒரு வங்கியில் இருந்து மதுரை ஆரப்பாளையத்திலுள்ள தேசிய வங்கிக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் பறக்கும் படையினர், 2 வேன்களை மறித்து சோதனையிட்டனர். இதில் 1.20 கோடி மற்றும் 10 லட்சத்தை இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சொல்லப்பட்ட 91 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்