SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாமக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வாசன் பெயரை குறிப்பிடாததால் வெளியேறிய தமாகாவினர்

2019-03-23@ 05:26:59

சென்னை: மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம் பாலை அறிமுக நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சியின் மத்திய சென்னை தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமாகாவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர் அண்ணாநகர் ராம்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தமாகாவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பெயரையோ, கட்சியின் பெயரையோ குறிப்பிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தமாகாவினர் மேடையில் இருந்த தலைவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களை அதிமுக மூத்த நிர்வாகிகள் மேடையில் இருந்து இறங்கி வந்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், தமாகாவினர் தங்களை அழைத்து வந்து இழிவுபடுத்தியதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்