SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘மிடாஸ் ஆலையில் நான் பங்குதாரர் கிடையாது’ தமிழகத்தில் மதுபான ஆலைகள் மூடப்படும்

2019-03-23@ 05:26:14

சென்னை: தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி இல்லை. ஏற்கனவே உள்ள மதுபான ஆலைகளை  படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 60 சிறப்பம்சங்கள் கொண்ட அமமுக தேர்தல் அறிக்கையை டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டார்.  அமமுகவின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சி துணைப் பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் சென்னையில் நேற்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள்:
* விவசாயத்தை அச்சுறுத்தும்  எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்.
* நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மற்றும் காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கும் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய சிறு வணிகக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
* தமிழகத்துக்கென தனி செயற்கைகோள் ஒன்றை இஸ்ரோவுடன் இணைந்து ஏவ நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழக அரசுப்பணிகளில் குறைந்தது 85 சதவிகித தமிழர்களே நியமிக்கப்பட சட்டம் இயற்றப்படும்.  
 * பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் உரிய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும். இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க போதுமான கூடுதல் நீதிமன்றங்கள் ஏற்படுத்தி தரப்படும்.
* 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை உடனடியாக விடுவிக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
* தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு உடனடியாக எடுக்கப்படும். ஏற்கனவே உள்ள மதுபான ஆலைகளை படிப்படியாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் தோறும் குடி மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட 60 சிறப்பம்சங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   
பின்னர், அவர் பேட்டியளிக்கையில், ‘‘குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றால் ஒவ்வொரு வேட்பாளரும் தனித்தனி சின்னங்களை பெற்று தேர்தலில் போட்டியிடுவார்கள். மிடாஸ் மதுபான ஆலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ராயபுரத்தில் இருந்து 27ம் தேதி முதல் என்னுடைய பிரசாரத்தை தொடங்குகிறேன்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2019

  24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்