SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாமக வேட்பாளர் மனு தாக்கலின்போது பாதியில் வெளியேறிய அதிமுக எம்எல்ஏ

2019-03-23@ 05:19:09

கடலூ : கடலூரில் பாமக வேட்பாளர் மனு தாக்கலின் போது அதிகாரிகளின் குளறுபடி மற்றும் கெடுபிடியால்  பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ பாதியில் வெளியேறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் டாக்டர். கோவிந்தசாமி போட்டியிடுகிறார். நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல் நிகழ்ச்சி நடந்தது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கலை பிற்பகல் 1.21 க்கு தாக்கல் செய்ய வேண்டும் என அதிமுக தலைமையிலிருந்து கூறியிருந்தனர்.   இதைத்தொடர்ந்து, அதிமுக கூட்டணி கட்சியினர் கார்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியுடன் 4 பேர் மட்டுமே முன்மொழிய செல்ல வேண்டும் என்ற நிலையில் அதிமுக சார்பில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், குறிஞ்சிப்பாடி முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன் மற்றும் தேமுதிக மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, தமாகா மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் பாஜக மாவட்ட நிர்வாகி தேவநாதன் உள்ளிட்டவர்களுடன் சென்றனர்.

அப்போது சுயேச்சை ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துகொண்டிருந்தார். இதனால் நாம் தமிழர் கட்சியினரும் பாமக வேட்பாளரும் மனு தாக்கல் செய்ய காத்திருந்தனர். ஆனால் அதிமுக தலைமை கூறியபடி குறித்த நேரத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு முன்னுரிமை வழங்கி  மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்புக்குள்ளானது. இந்த குளறுபடியால் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சத்யா பன்னீர்செல்வம், தேர்தல் அதிகாரிகளின் செயலை விமர்சித்து வேட்புமனு தாக்கலில் கலந்துகொள்ளாமல் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். அவர் சென்ற பிறகு தான் பாமக வேட்பாளர் கோவிந்தசாமி மனு தாக்கல் ெசய்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்