SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவிரவாதிகளுக்கு பரிந்து பேசி ராணுவத்தை அவமதிப்பதா? எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி சாடல்

2019-03-23@ 04:27:15

புதுடெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதல், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவிச் சென்று விமானப் படை நடத்திய அதிரடி தாக்குதல் ஆகிய சம்பவங்கள் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் மீது மீண்டும் புதிய தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி தொடுத்துள்ளார். தீவிரவாதிகளுக்கு பரிந்து பேசி, நமது ராணுவத்தை அவமதிப்பது எதிர்க்கட்சிகளின் சுபாவம் என்று கடுமையாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பி வருகின்றன. இதற்கு பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் வெளிநாட்டு விவகாரங்களைக் கவனித்து வரும் சாம் பிட்ராடோ கூறுகையில், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு விமானப்படை மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. ஆனால், என்னை பொறுத்தவரையில் இந்த விவகாரத்தை உலக அளவில் எப்படி எடுத்துச் சென்றது என்பது தெரியவில்லை” என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் தனது டிவிட்டரில், “ஜன்கா மாஃப் நஹி கரேஹி” (மக்கள் மன்னிக்க மாட்டார்கள்) என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்ட பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“காங்கிரசின் விசுவாசியும் காங்கிரசும் நாடு ஏற்கனவே என்ன தெரிந்து இருந்ததோ அதையே ஏற்றுக் கொண்டுள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு ராணுவம் மூலம் பதிலடி தருவதை காங்கிரஸ் விரும்பவில்லை. இது புதிய இந்தியா, தீவிரவாதிகளுக்கு அவர்களுடைய மொழியில் புரிந்து கொள்ளும் வகையில் பதில் அளிப்பது நம் கடமை” என்று மோடி குறிப்பிட்டுள்ளார். “எதிர்க்கட்சிகள், தீவரவாதிகளுக்கு பரிந்து  பேசி, நமது ராணுவ வீரர்களை ஒவ்வொரு நேரமும் மீண்டும் மீண்டும் அவமதித்து வருகின்றன. இந்த தருணத்தில் இந்தியர்கள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகள் குறித்து கேள்வி கேளுங்கள். அவர்களுக்கு கூறுங்கள், 130 கோடி இந்தியர்கள் மன்னிக்க மாட்டார்கள் அல்லது அவர்களின் எதிர்மறையான அணுகுமுறையை மறக்கமாட்டார்கள். இந்தியா எப்போதும் நமது ராணுவத்தின் பின்னால் உறுதியாக இருக்கும்” என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டில், “பிரதமர் நரேந்திர மோடி, “புல்வாமா தீவிரவாத தாக்குதல் என்பது ஒரு சதித் திட்டம், தேர்தலில் வாக்குகளை குவிக்க நடத்தப்பட்டது” என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் ராம் கோபால் யாதவ் கூறியிருந்தார். இதற்கு பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். “இது சதித்திட்டம்... என்றால், அரசு மாற்றம் ஏற்படும்போது, விசாரணை நடத்தப்படும். முக்கியமான நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், வாக்குகள் பெறுவதற்காக இளைஞரை யார் மரணத்தில் தள்ளியது என்று தெரிந்துவிடும் என்று வியாழன்று சட்டசபையில் நடந்த கூட்டத்தில் யாதவ் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற பேச்சுகள், கடும் கண்டனத்திற்கு உரியது என்று மோடி  கூறியுள்ளார். பிரதமர் மோடி தனது டிவிட்டரில், யாதவ், பிட்ரோடா ஆகியோரின் கருத்துகள், பேச்சுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்