SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியமே எய்ட்ஸ் வந்த நிலையில் உள்ளது

2019-03-23@ 00:56:59

மதுரை:  மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ``கடந்த டிச.26ம் தேதி எச்ஐவி தொற்று கொண்ட ரத்தம், விருதுநகர் மாவட்டம் சத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகாசி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்ட ரத்தம் முறையாக பரிசோதிக்கப்படாததே இதுபோன்ற நிகழ்வு நடைபெற காரணம். தானமாக வழங்கப்படும் ரத்தத்தில் எச்ஐவி, மஞ்சள் காமாலை, மலேரியா, சிபிலிஸ் ஆகிய நோய் தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநரின் கண்காணிப்பின்கீழ், முறையாக பரிசோதிக்கப்பட்டு ரத்தம் தானமாக பெறப்பட வேண்டும். பெரும்பாலான இடங்களில் இப்பணியிடம் காலியாகவே உள்ளது. எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தி காலியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான சிகிச்சை, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மக்களின் நலன் கருதி தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பானதாக பெற முறையான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எவ்வளவு தொகை  ஒதுக்கப்பட்டுள்ளது? எச்ஐவி தொற்று கொண்ட ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது  என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.இவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் நீலமேகம் ஆஜராகி, “பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வாழ விரும்பாமல் கணவர் பிரிந்து சென்று விட்டார்” என தெரிவித்தார். பின்னர் நீதிபதிகள், “தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியமே எய்ட்ஸ் வந்த நிலையில்தான் உள்ளது’’ என வேதனையுடன் தெரிவித்து, அரசுத்தரப்பில் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யாததால் மதுரை அரசு மருத்துவமனை டீன் வரும் 25ம் தேதி பகல் 2 மணியளவில் நேரில் ஆஜராக வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை குழந்தையுடன் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்