SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை பழுவூர் சிவன் கோயில் சிலை திருட்டு வழக்கில் டிஎஸ்பி காதர்பாட்ஷா மீண்டும் கைது

2019-03-23@ 00:50:40

கும்பகோணம் : நெல்லை சிவன் கோயில் சிலை திருட்டு  வழக்கில் டிஎஸ்பி காதர் பாட்ஷா மீண்டும் கைது செய்யப்பட்டார். விற்பனை செய்த சிலையை மீண்டும் கைப்பற்றி ஒப்படைக்க கொண்டு வந்தபோது சிக்கினார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டியில் ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் தோண்டியபோது சிவன், பார்வதி பஞ்சலோக சிலை உள்ளிட்ட 6 சாமி சிலைகள் கிடைத்தது. இந்த சிலைகளை தாசில்தாரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக அதே ஊரை சேர்ந்த சந்தானம் என்பவருடன் சேர்ந்து சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ஆரோக்கியராஜ் முயன்றார். அந்த சிலைகளின் மதிப்பு 20 கோடியாகும். இந்த தகவலறிந்த, அப்போதைய இன்ஸ்பெக்டர் காதர் பாட்ஷா, சப்இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் மற்றொரு போலீஸ்காரர் ஆகியோர் அந்த சிலைகளை கைப்பற்றி கடத்தல்காரர்களிடம் ₹15 லட்சத்துக்கு விற்றது தெரிய
வந்தது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் காதர்பாட்ஷா, டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். சுப்புராஜ் இன்ஸ்ெபக்டராக பதவி உயர்வு பெற்றார். இதனிடையே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் 2017-ல் காதர்பாட்ஷாவை கும்பகோணத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் உள்ளார்.

தற்போது, நெல்லை பழுவூர் நாறும்பூநாதர் சிவன் கோயிலில் நடராஜர் சிலை மாயமான வழக்கிலும் டிஎஸ்பி காதர்பாட்ஷா கைது செய்யப்பட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:
நெல்லை பழுவூர் சிவன் கோயிலில் 2005ம் ஆண்டு நடராஜர் சிலை மாயமானது. அப்போது அங்கு சிலை கடத்தல் பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டராக இருந்த காதர்பாட்ஷா (தற்போது டிஎஸ்பி) இந்த வழக்கில் தொடர்பில்லாத 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, அந்த நடராஜர் சிலையை காதர்பாட்ஷா கடத்தி தீனதயாளன் மூலம் ₹40 லட்சத்துக்கு விற்றுள்ளார். பின்னர் சுபாஷ் சந்திரகபூர் மூலம் அந்த சிலையை பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டது. இதைதொடர்ந்து சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டதால் பயந்துபோன டிஎஸ்பி காதர்பாட்ஷா சிலையை மீண்டும் தன்னிடம் ஒப்படைத்து விடுமாறு தீனதயாளனிடம் கூறியுள்ளார். இதன்பேரில், நடராஜர் சிலை, மேலும் ஒரு அம்மன் சிலை (ஒரு கை உடைந்து வெல்டிங் வைக்கப்பட்டது) கொல்கத்தா கொண்டு வரப்பட்டது. அப்போது கொல்கத்தா கஸ்டம்ஸில் சிக்கிய அந்த சிலைகளை பற்றி அதிகாரிகள், தமிழக சிலை கடத்தல் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில் காதர்பாட்ஷா சிலையை கடத்தி விற்று அப்பாவிகளை மாட்டிவிட்டது தெரியவந்தது. இந்த சிலை திருட்டு தொடர்பாக காதர்பாட்ஷா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு நெல்லையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று காலை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் அய்யப்பன் பிள்ளை முன் ஆஜர்படுத்தினர். அவரை ஏப்ரல் 5ம் தேதி வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi1

  ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

 • dr

  மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

 • hongkong

  சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

 • jappan

  ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

 • fire

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்