SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தினகரன் நாளிதழ் - சத்யா நிறுவனம் சார்பில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ-2019 கண்காட்சி

2019-03-23@ 00:13:47

சென்னை: தினகரன் நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் சார்பில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ-2019 என்ற கண்காட்சி நேற்று தொடங்கியது. தினகரன் நாளிதழ்- சத்யா நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் எல்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோன்று, இந்த ஆண்டும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் எக்ஸ்போ -2019 கண்காட்சி நேற்று தொடங்கியது. சத்யா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜாக்சன், எஸ்5 ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சல்மா பேகம், அபி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த ஆர்.லட்சுமணசாமி, பைசன் கிளீனிங் புராடக்ட்ஸ் நிர்வாக இயக்குநர் கே.டி.ஏசுதாஸ், அகத்தியர் பிரணவா பீடத்தின் தலைவர் எம்.வெங்கடாச்சலம் ஆகியோர் குத்து விளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். மேலும், 22ம் தேதி (நேற்று) முதல் வரும் 25ம் தேதி வரை நடக்கும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இதில்  ஒனிடா, புளூஸ்டார், வீடியோகான், எல்.ஜி உள்ளிட்ட பல நிறுவனங்கள் சார்பில் நூற்றுக்கணக்கான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், கண்காட்சியில் சத்யா நிறுவனம் சார்பில் அமைத்திருக்கும் ஸ்டாலில் எந்த பொருட்களை எடுத்தாலும் அதற்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும். தினமும் காலை 10 மணி முதல் இரவு வரை கண்காட்சி நடக்கிறது. முதல்நாளான நேற்று கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கண்காட்சியில் பங்கேற்ற ஒவ்வொரு நிறுவனமும் தங்களிடம் வாங்கும் பொருட்களை சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலையில் வழங்கியதால் பலர் போட்டிப்போட்டு வாங்கினர். இதனால் கண்காட்சி அரங்கம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சத்யா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜாக்சன்: ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் 5 முதல் 50 சதவீதம் வரை பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி வழங்குகிறோம். ஏ.சி குறைந்த விலையான ரூ.22 ஆயிரத்தில் இருந்து விற்பனை செய்கிறோம். 2 ஏசி வாங்கினால் 32 இச் எல்இடி டிவி இலவசமாக வழங்கப்படும். அனைத்து பொருட்களுக்கும் பரிசுகள் கட்டாயம் உண்டு. எளிய தவணை முறையில் ரூ.1 செலுத்தி ஏசியை எடுத்துச் செல்லலாம். மேலும் சமையல் அறையில் இருந்து கொண்டே டிவி பார்க்கும் வசதியாக குளிர்சாதன பெட்டியிலே தொலைக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. எஸ்5 ஹெல்த் ஹேர் நிர்வாக இயக்குனர் சல்மா பேகம்: உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வது, முகப்பருக்களை அகற்றுவது, முடி உதிர்வதை தடுப்பது, ெபாடுகு மற்றும் தேவையற்ற முடிகளை அகற்றுவது, உடல்முழுவதும் இருக்கும் கூடுதல் சதைகளை குறைத்தல் போன்ற சேவைகளை நவீன மிஷின்கள் மூலம் வழங்குகிறோம். ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு அழகுபடுத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் 30-50 சதவீதம் வரை சலுகை கொடுக்கிறோம்.
அபி இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த லட்சுமணசாமி: இந்தோனேசியா, மலேசியா, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தேக்கு மரத்தினால கட்டில், பர்னிச்சர், டைனிங் டேபிள் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களை அடக்க விலைக்கே விற்பனை செய்கிறோம். கண்காட்சி மூலம் 40 முதல் 60 சதவீதம் வரை குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

அகத்தியர் பிரணவ பீட தலைவர் வெங்கடாசலம்: எங்களிடம் வியூட்ரா என்ற ஹெர்பல் மூலிகையின் விலை ரூ.8,500 இந்த கண்காட்சியை முன்னிட்டு ரூ.2,000 தள்ளுபடி செய்து ரூ.6 ஆயிரத்துக்கு வழங்குகிறோம். இது அனைத்து உடல் நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஹார்ட் அட்டாக், பக்கவாதம், மூட்டுவலி, சோரியாசிஸ் போன்ற அனைத்து நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. ஒருமுக ருத்ராட்சம் முதல் 21 முக ருத்ராட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.  இதன் மதிப்பு ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. பைசன் கிளீனிங் புராடக்ட்க்ஸ் நிர்வாக இயக்குநர் கே.டி.ஏசுதாஸ்: வீடு மற்றும் கழிப்பறையை சுத்தம் செய்யப் பயன்படும் பிளீசிங் பவுடர், கிளீனிங் பவுடர், ஆசிட் போன்ற 32 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கண்காட்சியை முன்னிட்டு அனைத்து பொருட்களும் 50 சதவீதம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்