SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி புது நாடகம் வரும்

2019-03-22@ 07:05:33

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய விஐபி மோசடியாளர்களில் ஒருவர் நீரவ் மோடி. இவர் நிறுவன உத்தரவாத கடிதத்தை வைத்தே இவ்வளவு பெரிய அளவில் மோசடி செய்துள்ளார். அதாவது ஒரு நிறுவனம் இவருக்கு, இந்த தொகையில் நாங்கள் ஆர்டர் கொடுத்துள்ளோம். இதன் மூலம், அவருக்கு இவ்வளவு தொகை கைமாற உள்ளது என்று தெரிவிப்பதுதான் உத்தரவாத கடிதம். இதுபோன்ற உத்தரவாத கடிதத்தை வைத்து, வங்கியில் தொழில் நிறுவனங்கள் குறுகிய மற்றும் நீண்டக்கால கடன்களை பெறும். ஆனால், பல கோடி மதிப்புள்ள ஒரு வைரத்தையே பல நிறுவனங்களுக்கு விற்றது போல் கணக்கு காட்டிய பலே தொழிலதிபர் இவர்.

இவர் வெளிநாட்டில் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில், அவர் ஆன்டிக்குவா நாட்டில் குடியுரிமை பெற்றிருப்பது தெரியவந்தது. இதனால் அவர் அங்கிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு அவர் லண்டனில் உள்ள விலை உயர்ந்த ஒரு குடியிருப்பில் தங்கியிருப்பதும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் அணிந்திருந்த கோட் மட்டும் ₹15 லட்சம் பெறுமானமுள்ளது என்று கூறப்பட்டது. இதை கண்டுபிடித்தவர் ஒரு குறிப்பிட்ட பத்திரிகையின் நிருபர். அதாவது மீசையை வழித்து, தலைமுடியை குறைத்து சுற்றிக் கொண்டிருந்த நீரவ் மோடியை சரியாக அந்த ஆங்கிலேய பத்திரிகையாளர் மைக் பிரவுன் அடையாளம் கண்டு, பேட்டி எடுத்திருக்கிறார். நம்புவதை தவிர வேறு வழியில்லை. இதன்பின்னர் அவர் அதை தன்னுடைய பத்திரிகையில் பிரசுரிக்கிறார்.

அப்போதுதான் இந்தியாவிற்கு தெரியவருகிறது. இதையடுத்து, அவர் மீதான வழக்கு விவரங்களை அமலாக்கத்துறை அவசர, அவசரமாக லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவரை கைது செய்து நாடு கடத்த வலியுறுத்து
கிறது. இதை இங்கிலாந்து போலீசாரும், அவசர, அவசரமாக விசாரித்து, நீரவ் மோடியை கைது செய்துள்ளோம். மல்லையா விஷயத்தில் இவ்வளவு வேகம் இருந்ததாக தெரியவில்லை. ஏனெனில், அப்போது இந்தியாவில் தேர்தல் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இப்போது தேர்தல் நடக்கிறது. இனி நீரவ் மோடி மூலம் புது நாடகம் அரங்கேறினால், அதற்கு கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல என்ற பதில் கூட வெளியாகலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-06-2019

  27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்