SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கே.கே.நகர் பகுதியில் 3 கிலோ கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது

2019-03-22@ 00:10:23

சென்னை: கே.ேக.நகர் பகுதியில் 3 கிலோ கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கே.ேக.நகர் பகுதியில் அதிகளவில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கே.கே.நகர், அம்பேத்கர் சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, ெபண் உட்பட 2 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் பையுடன் நடந்து சென்றனர். இதை பார்த்த போலீசார், இருவரையும் அழைத்து அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அப்போது பையில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது, கே.கே.நகர் டாக்டர் அம்பேத்கர் சாலையை சேர்ந்த குட்டி (எ) குட்டியம்மாள் (40) மற்றும் கே.கே.நகர் காமராஜர் சாலையை சேர்ந்த சரோ (எ) சரவணன் (28) என தெரியவந்தது. குட்டியம்மாள் கே.கே.நகர் பகுதியில் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குட்டியம்மாள் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் ெசய்யப்பட்டது.

* திருநின்றவூர் கோமதிபுரம் 3வது குறுக்கு தெருவை சேர்ந்த சீனிவாசன் (65) என்ற கூலி தொழிலாளி நேற்று காலை நண்பரை பார்க்க மொபட்டில் சென்றபோது, கார் மோதி இறந்தார்.
* பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊரப்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் கோபிநாத் (39) என்பவரை கைது செய்தனர்.
* பட்டாபிராம், மாடர்ன் சிட்டி, 3வது தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (35). ஆவடி டேங்க் பேக்டரி ஊழியர். இவரது மனைவி திவ்யபாரதி. கடந்த 15ம் தேதி இரவு லோகேஷின் வீட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம், ஒரு சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேப்போன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் விக்ரம் என்பவரது வீட்டையும் உடைத்து மர்ம ஆசாமிகள் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம், மேல்மலையனூரை சேர்ந்த குள்ளகுமார் (43) என்பவரை கைது செய்தனர்.
* ஆவடி, வீராபுரம், வினோ நகர், முதல் தெருவை சேர்ந்தவர் சேகர் (47). நேற்று முன்தினம் சேகர் மனைவி விமலாவுடன் பெரியபாளையம் சென்றார். மாலை மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டை உடைத்து 5 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது. புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* பெசன்ட் நகர், ஓடைமா நகரை சேர்ந்த கீர்த்திகா (15) என்ற சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று முன்தினம் பொதுத்தேர்வு எழுதிவிட்டு  வீட்டிற்கு வந்த கீர்த்திகா இரவு தூட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து  சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* திருவான்மியூரை சேர்ந்த சுந்தர்ராஜன் (50) என்ற புரோகிதர் தொழில் நிமித்தமாக 2 பேரிடம் தலா ரூ.60 ஆயிரம் என மொத்தம் ரூ.1.2 லட்சம் பணம் வாங்கியுள்ளார். இந்த பணத்துடன் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில்  சென்றபோது உரிய ஆவணங்கள் இல்லாததால் காஞ்சிபுரம் தொகுதி பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
* அதேபோல் அசோக் நகரை சேர்ந்த கார்த்திக் (28) மாம்பலம் பகுதியில் தண்டவாளத்தை கடந்தபோது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில்  மோதி இறந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்