SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலியோ விழிப்புணர்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவோம்

2019-03-22@ 00:02:35

மதுரை: போலியோ தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் தயாராக உள்ளதாக ஐகோர்ட் மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த ஜான்சிராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  வருங்காலங்களில் இந்தியா முழுவதும் முறையாக மற்றும் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இம்மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், நடிகர்களில் அஜித், விஜய், சூர்யா மற்றும் நடிகர் சங்க செயலர் ஆகியோரை இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் சூர்யா, விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, பல்வேறு சேவைகளை செய்து வருவதாக குறிப்பிட்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்க செயலர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘போலியோ தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய ஒத்துழைப்பு வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் தயாராக உள்ளது. இச்சேவையில் தாமாக முன்வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் நடிகர்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்கிறோம்' என தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்