SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-03-22@ 00:02:29

‘‘என்ன இருக்கை எல்லாம் காலியாக கிடக்கு... பொதுக்குழுவுக்கு யாரும் வரலையா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குக்கரை நம்பி இருந்தால் அரசியல் எதிர்காலம் சூனியமாகி விடும் என்று அக்கட்சியில் உள்ள பலரும் நினைக்கிறாங்க... இவர் ஸ்லீப்பர் செல்கள் எல்லாம் தாய் கட்சியிேலயே செட்டிலாகிட்டாங்க... இதனால், இவரை நம்பி போனவங்க எல்லாம் வேறு கட்சிக்கு தாவ ஆரம்பிச்சுட்டாங்க... குக்கர் அப்ரோச் சரியில்ல... சிறைப்பறவை கொடுத்த பணத்தை எல்லாம் பதுக்கிட்டு, வேட்பாளரை அறிவிச்சுட்டு செலவையும் அவங்க தலையிலேயே கட்டுறாராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நான் வேறு மாதிரி கேள்விப்பட்டேனே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இடைத்தேர்தல் நடக்கும் இடத்தில் மட்டும் 5 ‘கே’  தரும் மேட்டர் தானே... இலை கட்சியை வீழ்த்தும் தொகுதிகளில் எது... எந்த இடத்தில் நாம் பலமாக இருக்கிறோம்... நம்முடைய உண்மையான விசுவாசி யாருன்னு அவர் போட்ட ஸ்கெட்சுல பத்து பேரு கூட தேறலையாம்... அதனால வெற்றி வாய்ப்புள்ள இடத்தில் தனக்கு விசுவாசமான வேட்பாளருக்கு மட்டுமே 5 ‘கே’ ஒரு ஓட்டுக்குன்னு கொடுக்கப்போகிறாராம்... மற்றபடி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு சிறைப்பறவை கொடுக்கும் பணத்தை இறைத்துவிட்டு நடுத்தெருவில் நிற்க நான் என்ன இளிச்சவாயனானு கேட்டாராம்... பழைய ஆட்களையும் கண்டுக்கலையாம்... இந்த தகவல் சிறைப்பறவைக்கு போச்சாம்... பல்லை நறநறவென கடிச்சவரு... இப்போது பைனான்ஸ் பொறுப்பை வேறு ஒருவருக்கு நேரடியாக மாற்றி விட்டு இருக்காராம்... இந்த முறை குக்கர் பல்லை நறநறவென கடிக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இரட்டை சிம் போன் கேள்விப்பட்டு இருக்கிறேன்... அதென்ன தேர்தல்ல இரட்டை பிளான்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சி தேர்தல் சம்மந்தமாக ஒப்பந்தம் போடும்போதே இன்னொரு ஒப்பந்தமும் போட்டுள்ளதாம். அதாவது இடைத்தேர்தல் செலவை நாங்களே செய்யறோம்... தேவையானால் அத்துடன் சேர்த்து சில நூறுகளை நாங்களே கொடுத்துடறோம்... நீங்க இந்த இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிக்கு பணம் கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் விருப்பம்... ஆனால் நாங்கள் அதை பார்த்துக்கிறோம்னு சொல்லிட்டாங்களாம்... அதேபோல கட்சிக்காரங்களையும் நாங்க பார்த்துக்கிறோம்னு உறுதி கொடுத்து இருக்காங்களாம்... அதனால ஒரு பக்கம் இடைத்தேர்தலை சந்திக்கும் இலை கட்சி கரன்சியை கொட்டி, வாங்க எங்களுக்கு வேலை பாருங்கனு கேட்கிறாங்க... இன்னொரு பக்கம் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கும் கட்சி எங்களுக்கு வேலை பாருங்கனு கரன்சியை கையில் வைத்து கொண்டு நிற்கிறார்களாம்... இதனால எந்த பக்கம் அதிகம் கரன்சி வருதோ அந்த பக்கம் போகலாம்னு கட்சி நிர்வாகிகள் நினைக்கிறாங்க.. சில கில்லாடி நிர்வாகிங்க பகல்ல ஒரு கட்சிக்கும், ராத்திரியில இன்னொரு கட்சிக்கும் வேலை செய்து கல்லா கட்டி வர்றாங்களாம்... இதனால தொகுதி கிடைச்ச மாதிரியும் ஆச்சு... தேர்தல் செலவுக்கான பணம் மிச்சமாச்சுனு கூட்டணி கட்சிகள் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காணாமல் போனவர் பட்டியல் ெதரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி மாவட்ட எம்.பி., ேதர்தலில் இலை கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளருக்கு கடும் அதிருப்தி கிளம்பியிருக்காம். அதிலும் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியின் உச்சத்தில் இருக்காங்க... மாநகர தந்தையாக இருந்த மாஜி நாடக நடிகரோ ஒரு படி மேலே ேபாய், ‘பட்டியலில் எனது பெயர் தான் முதலிடத்தில் இருந்தது. அது மாறியது மர்மமாக இருக்கு’ என்று புலம்புகிறாராம். நாடக நடிகர் என்பதால் அன்றாட அரசியல் நிகழ்வுகளை ஆக்‌ஷனுடன் கதையாக  சொல்லி, கூட இருப்பவர்களை எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பாராம் மாஜி. அதனால் எப்போதும் அவரை சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்ேட இருக்குமாம். கடந்த சில நாட்களாக வேட்பாளர் பட்டியலில் இருந்து தனது ெபயர் மாயமானதில் உள்ள மர்மங்கள் குறித்த  கதையை மட்டுமே தொடர்ந்து கண்ணீருடன் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் மாஜி மாநகர தந்தை. வேறு வழியில்லாமல் அடிப்பொடிகளும் கதையை ேகட்டு ஆறுதல் சொல்லிக்கிட்டு இருக்காங்களாம்...’’என்றார் விக்கியானந்தா. ‘‘கோயம்பேடும், திண்டிவனமும் எப்டி ஒரே பஸ்சில் டிராவல் பண்றாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இவங்க எல்லோருக்கும் மேலே ஒருத்தர் இருக்காரே அவர்தான் கன்ட்ரோல் பண்ணி வைச்சிருக்காராம்... கோயம்பேடுகாரர் கிட்ட ஷா கொடுத்த வாக்குறுதி... இந்த முறை எந்த கூட்டணி கட்சியும் யார் காலையும் வாராது... உண்மையாக உழைப்பாங்கனு சொல்லிதான் இலை கூட்டணிக்கு கோயம்பேடுகாரரை வர வைச்சாங்களாம்... அதனால்தான் மச்சான் ரொம்ப சந்ேதாஷமாக இருக்காராம்... ஆனால் டெல்லியும், கோயம்பேடும், திண்டிவனமும் பேசினது கீழ் மட்ட ெதாண்டர்களுக்கு சொல்லவா போறாங்க... அதனால தாமரை இலையில் ஒட்டாத தண்ணீர் போலதான் இலை கட்சி கூட்டணியில இருக்கிற தொண்டர்கள் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் கமிஷனை பற்றி சொல்லவே இல்லையே...’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.‘‘சிம்பிள்... பதினெட்டு தொகுதிகளை குறி வைச்சே ஒரு பெரிய டீம் இறங்கப்போகுதாம்... அது இலை கட்சிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தும்னு பேசிக்கிறாங்க... மொழி தெரியாத அதிகாரிகள் வருவதால சின்ன அளவுல கூட ஒரு பைசா கை மாற விடமாட்டோம்னு சொல்றாங்க... அதற்கு ஏற்றார் போல பழைய பைல்களை வருமான வரித்துறையிடம் வாங்கி தேர்தல் நேரத்தில் யார் யார் மூலம் பணம் சப்ளை ஆச்சு... எந்த நபர் மூலம் பெரிய அளவில் பணம் பட்டுவாடா ஆச்சு என்பது எல்லாம் ஆர்கே நகர் தேர்தல்ல குறிப்புகளை வைச்சு காய் நகர்த்திட்டு வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாம்பழம் என்ன சொல்லுது...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘யாரையும் எதிர்த்து பேசாதீங்க... தேர்தல் வேலையை மட்டும் பாருங்க... வீடு வீடாக போய் ஓட்டு கேளுங்க... நம்ம சமுதாய தலைவர்களை சந்தித்து பேசுங்கனு திண்டிவனத்துல இருந்து உத்தரவு வந்ததாம்... அதை கேட்ட மாம்பழம் நிர்வாகிங்க... ஒத்தை பைசா கூட கொடுக்காம... கொள்கையே இல்லாம போனால் நம்மளை என்ன நினைப்பாங்க... சமுதாயத்துல நமக்கு இருந்த பேரும் போச்சு... இப்போ ெதரு தெருவா போய் ஓட்டு கேட்டு இருக்கிற மானம், மரியாதை போகவான்னு பேசிக்கிறாங்க...’’ என்று புலம்புறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்