SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்

2019-03-21@ 09:04:02

கோவை : கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ்(64) மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். வீட்டில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதில் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் உயிரிழந்துள்ளார். கனகராஜீக்கு ரத்தினம் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உயிரிழந்த கனகராஜின் உடல் சுல்தான்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவர் அதிமுக ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளில் வகித்து வருகிறார்.

2019 பேரவை தேர்தலில் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கனகராஜ் வெற்றி பெற்றார். தற்போது  சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மறைவால் சட்டப்பேரையில் எம்.எல்.ஏக்களின் காலியிடம் 22-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி தொகுதியுடன் சூலூர் தொகுதியும் தற்போது காலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்