SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் துணை ராணுவ படை வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வீரர்கள் சுட்டுக் கொலை

2019-03-21@ 08:05:41

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வீரர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  . ஜம்மு காஷ்மீரின் உதாம்பூர் பகுதியில் 3 துணை ராணுவப் படை வீரர்களை சக வீரர் ஒருவரே சுட்டுக் கொன்றுள்ளார்.

பட்டால் பாலியா ராணுவ முகாமில் நேற்று இரவு துணை ராணுவப் படை வீரர்கள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் போது ஆத்திரமடைந்த அஜித்குமார் என்ற வீரர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில்  போக்ராமால், யோகேந்திர சர்மா, உமேத் சிங் ஆகிய 3 துணை ராணுவப் படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர் தன்னை தானே  அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். இதனால் பலத்த காயத்துடன் அவர் உதாம்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்