SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்துவோம்: மதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

2019-03-21@ 03:41:00

சென்னை: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்படும் என மதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.   திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஈரோடு தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், மதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். நிகழ்ச்சியில், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தேர்தல் அறிக்கை வரைவுக் குழுவை சேர்ந்த ஆர்.டி.மாரியப்பன், வந்தியத்தேவன், அந்திரிதாஸ், மணவை தமிழ்மாணிக்கம், எழுத்தாளர் மதுரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதிமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில சிறப்பு அம்சங்கள் வருமாறு:
* காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி அமைத்து, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநட்ட குரல் எழுப்பும்.
* விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கவும், வங்கிகள் கடன் உதவி அளித்திடும் வழிமுறைகளை எளிமைப்படுத்தவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்யவும் வலியுறுத்துவோம். தற்போது தேசிய வங்கிகள் வழங்கும் கடன் 9 சதவீதம் மட்டுமே இருக்கிறது.  இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, விவசாயத்திற்கு 18 சதவீதம் நிதி வழங்க வலியுறுத்துவோம்.
* தொழில்துறை சீரமைப்புக்குத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
* சமூக நீதியைப் பாதுகாக்க, தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம்.
* திருநெல்வேலியை மையமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வலியுறுத்துவோம்.
* ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க விடாமல் செய்து தமிழ்மக்களை காக்கும் பணியில் மதிமுக முனைப்புடன் ஈடுபடும்.
*  தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முயன்றால், மதிமுக கடுமையாக எதிர்க்கும்.
* மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறித்த பாஜ அரசு, தற்போது ஒட்டுமொத்த மருத்துவக் கல்வியை வணிகம் ஆக்குவதற்கும், மாநில உரிமைகளை நசுக்குவதற்கு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய அவசரச் சட்டத்தையும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவையும் திரும்பப் பெற குரல் கொடுப்போம்.
* இளைஞர்கள் சீரழிவிற்கும் மூல காரணமான மதுக்கடைகளை மூடவும், முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் மதிமுக என்றும் உறுதியாக இருக்கிறது.
* புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி கிடைக்கக் குரல் கொடுப்போம்.
* புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைகளில் தமிழர்களுக்கே பெருமளவு பணிகளை வழங்க குரல் கொடுப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

 • 23-04-2019

  23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்