SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் கட்டமாக 21 மக்களவை தொகுதிகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

2019-03-21@ 03:40:11

சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. போட்டியிடும் வேட்பாளர்களில் 21 பேர் அடங்கிய முதல் பட்டியலை கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: கமீலா நாசர் (மத்திய சென்னை), ஏ.எஸ்.மவுரியா (வடசென்னை), எம்.சிவகுமார் (பெரும்புதூர்), டாக்டர் லோகநாதன்  (திருவள்ளூர்), என்.ராஜேந்திரன் (அரக்கோணம்), ஆர்.சுரேஷ் (வேலூர்), எஸ்.காருண்யா (கிருஷ்ணகிரி), டி.ராஜசேகர் (தர்மபுரி), அன்பின் பொய்யாமொழி (விழுப்புரம்), எம்.பிரபு மணிகண்டன் (சேலம்), ராஜேந்திரன் (நீலகிரி), டாக்டர்.எஸ்.சுதாகர் (திண்டுக்கல்), வி.ஆனந்தராஜா (திருச்சி), டி.ரவி (சிதம்பரம்), ரிஃபாயதீன் (மயிலாடுதுறை), கே.குருவையா (நாகை), எஸ்.ராதாகிருஷ்ணன் (தேனி), டி.பி.எஸ்.பெருமாள் (தூத்துக்குடி),  எம்.வெண்ணிமலை (திருநெல்வேலி), ஜே.எபினேசர் (கன்னியாகுமரி), டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் (புதுச்சேரி).

பின்னர் கமல் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது 21 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களும், தேர்தல் அறிக்கையும் வருகிற 24ம் தேதி கோவையில் வெளியிடப்படும். தேர்தல் அறிக்கையில் குடிநீர், மருத்துவம், கல்வி உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இரண்டாவது பட்டியலில் பெண் வேட்பாளர்கள் நிறைய இடம் பெறுவார்கள். நான் போட்டியிடும் தொகுதியும் கோவையில் அறிவிக்கப்படும்.

மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கையை படித்தேன். அதில் நான் சின்ன வயதிலிருந்து கேட்ட விஷயங்கள்தான் இருக்கிறது. அதை மக்கள் நீதி மய்யம் நிறைவேற்றும். நல்ல வேட்பாளர்களை கவனமாக தேர்வு செய்வதால் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சியில் உள்கட்சி பூசல் எதுவும் இல்லை  என்றார்.

கமல் கோபம்
கமல் பேட்டி அளிக்கும்போது ஒரு நிருபர் ‘கட்சியில் சேர்ந்த 3 நாளில் கோவை சரளா வேட்பாளர் நேர்காணல் நடத்தினாராமே?’ என்று கேட்டார் அதற்கு கோபமாக பதில் அளித்த கமல். ‘என்னை கேள்வி கேட்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று என்னால் கேட்க முடியும். ஆனால் கேட்க மாட்டேன். காரணம் கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு தந்து, உங்களை மதித்துதான் நான் அழைத்திருக்கிறேன். அதற்காக இப்படியெல்லாம் கேட்காதீர்கள். என் கட்சியில் உள்ள எந்த ஒரு பெண்ணுக்கும் அந்த உரிமை இருக்கிறது’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

 • 23-04-2019

  23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்