SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் இரண்டு நாளில் மக்களவைக்கு 29 பேர் மனு தாக்கல்

2019-03-21@ 03:39:24

சென்னை: தமிழகத்தில் 39 மக்களவை தேர்தலில் கடந்த இரண்டு நாட்களில் 29 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். சட்டமன்றத்துக்கு 3 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 19ம் தேதி (நேற்று முன்தினம்) தொடங்கியது. முதல்நாளில் மக்களவை தொகுதிக்கு 20 பேரும், சட்டமன்றத்துக்கு 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று 2வது நாளில் 9 பேர் மட்டுமே மக்களவை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். சட்டமன்றத்துக்கு ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்தனர். இதன்படி மக்களவைக்கு கடந்த 2 நாளில் 29 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவித்தாலும், இன்னும் யாரும் ேவட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்த இரண்டு கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அதன்படி அதிமுகவினர் வருகிற திங்கள் (25ம் தேதி) வேட்புமனு செய்ய வாய்ப்புள்ளது. மக்கள் நீதி மையம், அமமுக ஆகிய கட்சிகள் சார்பில் இன்னும் முழுமையாக வேட்பாளர் பெயர் அறிவிக்காததால் வேட்புமனு தாக்கல் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்