SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செலவின பார்வையாளர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை

2019-03-21@ 03:37:18

சென்னை: சென்னை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள செலவின பார்வையாளர்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 6 செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி, வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு சஞ்ஜீவ் குமார் தேவ் (94999 56202), விவேகானந்த் மவுரியா (94999 56203), தென் சென்னை தொகுதிக்கு நவீன் (94999 56205), குருபிரசாத் (94999 56206), மத்திய சென்னை தொகுதிக்கு முஜூம்தர் (94999 56209), மங்கராஜூ (94999 56208) உள்ளிட்ட 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், செலவின பார்வையாளர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் லலிதா, மதுசூதன் ரெட்டி, கூடுதல் காவல் ஆணையர் தினகரன், நான்கு தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்