SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

2019-03-21@ 03:35:16

சென்னை: கொடநாடு கொலை வழக்கில் முதல்வர் குற்றவாளி என்று விமர்சித்தது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்களித்தும் உத்தரவிட்டுள்ளது.  ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் விடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில் இந்த வீடியோவை மையமாக வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக, மு.க.ஸ்டாலின் மீது சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி, இந்த வழக்கில்  மார்ச் 21ம் தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை கோரியும், சம்மனை ரத்து செய்யக்கோரியும் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மு.க.ஸ்டாலின் சார்பில் வக்கீல் குமரேசன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி,   சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடைவிதித்தும், மு.க.ஸ்டாலின் ஆஜராக விலக்களித்தும் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு பதில் தரவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்