SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளடி வேலையால் மதுரையில் கலகலத்த அதிமுக

2019-03-21@ 03:33:29

தென் மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய ெதாகுதி மதுரை. இந்த தொகுதியில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய, மதுரை மேற்கு உள்ளிட்ட 6 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன.
கடைசியாக கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் 4,54,167 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவைச் சேர்ந்த வேலுசாமி 2,56,731 வாக்குகள் ெபற்று 2 வது இடத்தையும், தேமுதிகவின் சிவமுத்து குமார் 1,47,300 வாக்குகள் பெற்று 3 வது இடத்தையும், காங்கிரசின் பாரத் நாச்சியப்பன் 32,143 வாக்குகள் பெற்று 4 வது இடத்தையும் பிடித்தனர். இதுவரை நடைபெற்ற 16 தேர்தலிகளில் காங்கிரஸ் 8 முறையும், இடதுசாரிகள் 4 முறையும், ஜனதா கட்சி 1 முறையும், தமாகா 1 முறையும், திமுக ஒரு முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.  கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோபால கிருஷ்ணன் மீது பொது மக்கள்  கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பொது மக்கள் போய் என்ன கேட்டாலும் செய்து முடியாது என்று வெளிப்படையாக தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல், வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள் இல்லாதது உள்ளிட்டவைகள் மதுரையின் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. யாருக்கு வெற்றி? இந்த முறை திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் எழுத்தாளர் வெங்கடேசன், அதிமுக கூட்டணி சார்பில் முன்னாள் மேயரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்தியன், அமமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ராஜன் செல்லப்பா மதுரை மேயராக பதவியேற்றது முதல் தற்போது வரை மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதனால் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே ராஜ் சத்தியனுக்கு எதிராக அதிமுகவினர் உள்ளடி வேலைகள் பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது. அமமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள டேவிட் அண்ணா துரையும் அதிமுகவின் வாக்குகளை கணிசமாக பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன். இவர் எவ்வளவு ஓட்டுக்களை பிரிக்கிறாரோ அந்த ஓட்டுக்கள் எல்லாம் அதிமுகவின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து விடும். குடும்ப செல்வாக்கும் அதிகமாக உள்ளது. அதோடு, ஒரு குறிப்பிட்ட சமூக வாக்குகள் மொத்தமாக இந்த முறை அண்ணாத்துரைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் 2வது இடத்துக்கு அதிமுகவும், அமமுகவும் போட்டியிடும் சூழ்நிலை மதுரையில் உருவாகியிருப்பதாக முதல் கட்ட கள நிலவரத்தில் தெரியவந்துள்ளது.கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 4 தொகுதிகளையும், திமுக 2  தொகுதிகளையும் கைப்பற்றியது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அதிகம் வெற்றி பெற்ற இந்த தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணியின் கையே ஓங்கி இருக்கிறது.

மொத்த வாக்களர்கள்    15,20,728
ஆண்கள்    7,50,321
பெண்கள்    7,70,328
திருநங்கைகள்    79

1952    கக்கன்(காங்கிரஸ்)
1957    கே.டி.கே.தங்கமணி
(இந்திய கம்யூனிஸ்ட்)
1962    என்.எம்.ஆர்.சுப்பராமன்
( காங்கிரஸ்),
1967    பி.ராமமூர்த்தி(மார்க்சிஸ்ட்)
1971    சுவாமிநாதன்(காங்கிரஸ்)
1977    சுவாமிநாதன்(காங்கிரஸ்)
1980    ஏ.ஜி. சுப்புராமன்
(காங்கிரஸ்)
1984    ஏ.ஜி. சுப்புராமன்
(காங்கிரஸ்)
1989    ராம்பாபு(காங்கிரஸ்)
 1991    ராம்பாபு(காங்கிரஸ்)
1996    ராம்பாபு (தமாகா) சார்பில் போட்டியிட்டு பெற்றார்.
1998    சுப்ரமணிய சாமி(ஜனதா),
1999    பி.மோகன்(மார்க்சிஸ்ட்)
2004    பி.மோகன்(மார்க்சிஸ்ட்)
2009    மு.க.அழகிரி (திமுக)
2014    கோபால கிருஷ்ணன்
(அதிமுக)


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்