SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவை தேர்தல் எதிரொலி நன்னடத்தை கைதிகள் விடுதலை நிறுத்தம்: சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

2019-03-21@ 03:16:44

வேலூர்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், 60 வயது கடந்த ஆயுள் தண்டனை பெற்று 5 ஆண்டுகள் தண்டனை அனுபவித்திருந்தால் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  இதையடுத்து, தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறை மற்றும் மாவட்ட சிறைகளில் நன்னடத்தை கைதிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டு 1500 கைதிகள் விடுதலை செய்யலாம் என்று சிறை நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் நன்னடத்தை கைதிகள் பல கட்டங்களாக விடுதலை செய்யப்பட்டு வந்தனர். இதுவரை 1100க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறைகளில் 350க்கும் மேற்பட்ட நன்னடத்தை கைதிகள் விடுதலையை எதிர்நோக்கி காத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனால் நன்னடத்தை கைதிகள் விடுதலையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி சிறைத்துறையினருக்கு வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் சிறைகளில் உள்ள 1100க்கும் மேற்பட்ட கைதிகள் கடந்த டிசம்பர் மாதம் வரை விடுதலை செய்யப்பட்டனர். இதற்கிடையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பால், கைதிகள் விடுதலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முடிந்து, மே மாதத்திற்கு பிறகு கைதிகள் விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளது’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்