SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பறக்கும்படை வாகன சோதனையில் சிக்கியது மதுரையில் 16 கோடி மதிப்பிலான 80 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

2019-03-21@ 03:15:49

மதுரை: 16 கோடி மதிப்புள்ள 80 கிலோ தங்கக் கட்டிகள் வாகன சோதனையில் சிக்கிய சம்பவம் மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை அடுத்த சமயநல்லூர் பஸ் ஸ்டாப் அருகே தோட்டக்கலைத்துறை அலுவலர் விஜயா தலைமையிலான பறக்கும் படை குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.    அப்போது சேலத்திலிருந்து மதுரை வந்த கொரியர் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், வேனில் 45 பெட்டிகளில் சுமார் 80 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. விசாரித்ததில், ‘‘இந்த தங்கக் கட்டிகள் மதுரையில் உள்ள பல்வேறு நகைக்கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக அனுப்பப்பட்டவை. இந்த பெட்டிகளை மதுரை அய்யர்பங்களாவில் உள்ள கொரியர் கிளை அலுவலகத்தில் இறக்க வந்தோம். அங்கிருந்து பல்வேறு நகைக்கடைகளுக்கு சப்ளை செய்யப்படும்’’ என வேனில் இருந்த ஊழியர் மனோஜ் கூறியுள்ளார். ஆனால் ஆவணங்கள் இல்லை என்பதால், தங்கக் கட்டிகளுடன் வேனை பறிமுதல் செய்து கலெக்டர் அலுவலகம் கொண்டு வந்தனர். கலெக்டர் நடராஜன் தலைமையில் வணிக வரித்துறை நகை மதிப்பீட்டாளர் ஆய்வு செய்து அதன் மதிப்பு 16  கோடி என தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்