SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயமுறுத்தும் ஆணையம்

2019-03-21@ 00:06:07

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. விறுவிறுப்பாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு பிரசாரத்திற்கு செல்ல அனைத்துகட்சிகளும் தயாராவதற்குள் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் அதிகாரிகள் களமிறங்கி விட்டனர். துணை ராணுவம் குவிக்கப்பட்டு, வாகன சோதனை மற்றும் பறக்கும்படை சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தினமும் ஆங்காங்கே ரூ.1 கோடி பிடிபட்டது, தங்கம், வைர நகைகள் பிடிபட்டன என்றெல்லாம் செய்திகள் வெளியாகி வருகின்றன. முறையாக நகை கடைகளுக்கு எடுத்துச்செல்பவர்கள், வியாபாரத்திற்கு, மருத்துவ தேவை மற்றும் திருமண செலவு உள்ளிட்ட சுயதேவைகளுக்காக எடுத்துச்செல்லும் நபர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் தேர்தல் வந்தாலே வியாபாரிகள் உள்ளிட்ட அத்தனை பேரும் முடங்கிப்போய் விடுகிறார்கள். தேர்தலுக்கு முன்பும் லட்சக்கணக்கான பணத்தை அவர்கள் கையாண்டுதான் வந்தார்கள். ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின் குறிப்பாக வியாபாரிகளை குறிவைத்து பறக்கும்படை பறிமுதல் செய்து அனைவரையும் பதற்றத்திற்குள்ளாக்கி வருகிறது.

ஆனால் பறக்கும்படை அதிகாரிகள் பார்வையில் இன்று வரை எந்த அரசியல் பிரமுகரும் சிக்கவில்லை. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 2 லட்சம் வாக்காளர்களை குறிவைத்து ரூ.89 கோடி பட்டுவாடா செய்ததாக பிடிபட்ட ஆவணங்கள் அடிப்படையில் கூட தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதாவது எடுக்கவிரும்பவில்லை. அங்கு முதலில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு ரூ.20 டோக்கன் வழங்கப்பட்டதாகவும், ஆளும்கட்சி சார்பில் வீடுவீடாக ரூ.6 ஆயிரம் விநியோகம் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்தவிவகாரங்களில் எல்லாம் பட்டும்படாமல் ஆணையம் நடந்து கொண்டது. இந்த தகவலுக்கு பதில் சொல்வதைக்கூட ஆணையம் தவிர்த்தது. ஆனால் ஏழை, எளிய மக்களிடம், வியாபாரிகளிடம் ஆணைய அதிகாரிகளின் வீரத்தை அனைவரும் பார்க்க முடியும்.

தினசரி செய்திகள் வரவேண்டும் என்பதற்காகவே சில அதிகாரிகள் வியாபாரிகளை துன்புறுத்துவது போல் தெரிகிறது. இப்படி பிடிபட்ட பணத்தை திரும்ப பெற வியாபாரிகள் படாதபாடு பட வேண்டியது இருக்கிறது. இதனால் ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழகத்தில் பிடிபடும் பணம் மற்றும் நகைகள் உரிய ஆவணம் இல்லாமல் திரும்ப பெற முடியாததால் அப்படியே அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது. தேர்தல் முறைகேடுகளை, வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்கும் வகையில்தான் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கை இருக்க வேண்டும். மாறாக அப்பாவி மக்களை அச்சுறுத்தும் வகையில் நடவடிக்கை இருக்கக்கூடாது. தற்போது ஆணைய நடவடிக்கைகள் எல்லாம் ஏப்ரல் 18 முடியும் வரை பொதுமக்களை பயமுறுத்தும் வகையில்தான் அமைந்துள்ளது. இதை மாற்றி எளிமைப்படுத்தினால் இன்னும் நல்லது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்