SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரியும் சகிப்புத்தன்மை

2019-03-20@ 04:35:17

இந்தியாவில் அதிகரித்துவரும் மணமுறிவு வழக்குகள் நம் பாரம்பரியத்துக்கு வேட்டு வைக்கிறது. நம் கலாச்சாரத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. நம் சமுதாயத்தில் அச்சத்தை உருவாக்குகிறது. மனம் விசித்திரமானது. எந்த நேரத்தில், எந்த முடிவை எடுக்கும் என  தெரியாது. சமூக மாற்றம், தவறான  தொடர்பு,  ஒழுக்கமின்மை, அழகு பற்றிய மதிப்பீடு, சந்தேக எண்ணம்,  வரதட்சணை  கொடுமை, ஆண்மைக்குறைபாடு, பெண்ணின்  பொருளாதார சுதந்திரம், விருப்பமில்லா திருமணம், திருமணத்துக்கு வெளியே  உறவு உள்ளிட்டவை விவாகரத்துக்கு காரணமாக அமைகின்றன. திருமணத்துக்கு பிறகு குழந்தைப்பேறு அமையாததும் மணமுறிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

 கடந்த  2018ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தோராயமாக 7.13 லட்சம் விவாகரத்து  வழக்கு நிலுவையில்  இருப்பதாக மத்திய சட்டத்
துறை அமைச்சகம் புள்ளி  விவரம் ெவளியிட்டுள்ளது. இதில், கேரளா நம்பர் 1 இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் மட்டும் 47,525 விவகாரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. 21,672 விவாகரத்து  வழக்குகளுடன் தமிழகம்  12வது இடத்தில் உள்ளது.  தமிழகத்தில்  ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1200  விவாகரத்து வழக்குகள் பதிவாகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கு தொடுத்து விட்டு, 10 ஆண்டுகளுக்கும்  மேலாக விவாகரத்துக்கு காத்திருப்பவர்களும் இருக்கின்றனர்.  விவாகரத்து  வழக்கு  எண்ணிக்கை பெருகுவதற்கு ஏற்ப, அவற்றை விரைவாக விசாரித்து தீர்வு காண போதிய கட்டமைப்பு வசதி  நம் நாட்டில் இல்லை. அதனால், நிறைய விவாகரத்து வழக்குகள் முடங்கி விடுகின்றன.

சென்னையில் 8 குடும்ப  நல நீதிமன்றங்கள் இருந்தும், வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை. மும்பையில்  15க்கும் மேற்பட்ட குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. தம்பதியரிடம் விரிசல் முற்றுவதற்கு முக்கிய  அடிப்படை காரணம், சகிப்புத்தன்மை. இது, வெகுவாக குறைந்து வருகிறது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இல்லாமல் போகிறது. இவற்றை, வளர்த்துக்கொண்டால், மணமுறிவுக்கு  முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். வாழ்க்கை முழுக்க இணைந்து வாழும்  வாழ்க்கை துணையிடம் விட்டுக்கொடுக்காமல் சண்டைக்கோழியாக  எதிர்த்து நிற்பது பேராபத்தை உருவாக்குகிறது. ஈகோ-வை விடுத்து, சகிப்புத்தன்மையை வளர்ப்பது, உறவுக்கு வலு  சேர்க்கும். விவாகரத்து வழக்குகளுக்கு விடை கொடுக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்