SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திராவில் காஜுவாக்கா, பீமவரம் ஆகிய 2 பேரவை தொகுதிகளில் பவன் கல்யாண் போட்டி

2019-03-20@ 02:53:01

திருமலை: ஆந்திராவில் காஜுவாக்கா, பீமவரம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளில் நடிகர் பவன் கல்யாண் போட்டியிட உள்ளார் என்று அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் வருகிற 11ம் தேதி நடக்கிறது. நடிகரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் எந்த தொகுதியில் இருந்து போட்டியிடுவது என்று ஜன சேனா கட்சி மாநிலம் முழுவதும் சர்வே மேற்கொண்டது. இதில் அனந்தப்பூர், திருப்பதி, ராஜா நகரம்,  பிட்டாபுரம், பீமவரம், காஜுவாக்கா, பெந்துர்த்தி,  இச்சாபுரம் ஆகிய 8 சட்டப்பேரவை தொகுதிகள் பவன் கல்யான் போட்டியிடுவதற்கு உகந்த தொகுதிகளாக சர்வே முடிவுகளில் தெரிய வந்தது.

இதையடுத்து கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த 8 தொகுதிகளில் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று மேலும் ஒரு சர்வே நடத்தியபோது பீமவரம்,  காஜுவாக்கா ஆகிய இரண்டு தொகுதியிலிருந்தும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கு கோதாவரி மாவட்டம், பிமவரம் தொகுதியில் இருந்தும், விசாகப்பட்டினம் மாவட்டம், காஜுவாக்கா ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதியில் இருந்தும் பவன் கல்யாண் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. விரைவில் எந்த தேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று ஜன சேனா கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கங்காதரம் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்