SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏழைகளுக்கு மாதம்தோறும் 1500 தேர்தல் அறிக்கை குறித்து அதிமுகவிடம் ஆணையம் விளக்கம் கேட்கும்: சத்யப்பிரதா சாஹு பேட்டி

2019-03-20@ 02:37:56

சென்னை: மாதம்தோறும் 1500 வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதிமுகவிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஒரு தொகுதிக்கு 2 பேர் வந்துள்ளனர். அதன்படி, மத்திய சென்னைக்கு மஞ்ஜித்சிங் (09530993410), மஜூம்தர் (08985970139), மங்கராஜூ (9172257521), தென்சென்னைக்கு குருபிரசாத் (09845255331), மரப்பு நவீன் (9849095412), வடசென்னைக்கு சஞ்சீவ்குமார் தேவ் (09408792200), விவேகானந்த் (9935380337),

திருவள்ளூருக்கு முகேஷ் கட்டாரியா (09953694841), பிரவீன்குமார் (98911381910), பெரும்புதூருக்கு அமீஷ் அகர்வால் (9953909178), அர்ஜூன் லலியத் (08130144488), காஞ்சிபுரத்துக்கு பூபேந்திரசிங் அனந்த் (9408792047), சுஜித்குமார் (09449073437) ஆகியோர் செலவீன பார்வையாளராக வந்துள்ளனர்.
பூந்தமல்லியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு பிரவீன்குமார் (9891138191), பெரம்பூர் இடைத்தேர்தலுக்கு விவேகானந்த் மவுரியா (9935380337), திருப்போரூர்  பூபேந்திர சிங் ஆனந்த் (9408792047), நிலக்கோட்டை  மனோஜ்குமார் (9582398822), திருவாரூர்-மகேஷ்குமார் யாதவ் (9424349186), தஞ்சாவூர்-மந்துகுமார் தாஸ் (9969238334), மானாமதுரை-விவேக் (09452802520), சாத்தூர்-பாஸ்கர் ராவ், பரமக்குடி-மகாவீர்சிங் சவுகான் (09811105296), விளாத்திகுளம் -ஆகாஷ்சிங்கால் (07415825382), சோளிங்கர்-யதுவீர் சிங் (8005445287), குடியாத்தம் மற்றும் ஆம்பூர்-ரவிகாந்த் (9971538285),

ஓசூர்-பைசன் நய்யார் (9811081982), பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் கரூர்  -உமேஷ் பதக் (08005445262), ஆண்டிப்பட்டி-ஹித்தேந்திர பவ்ரோஜ் நினேவ் (7588182230), பெரியகுளம்-பரூக் ஷீசாத் (9890059092) செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மாதம் தோறும் ரூ.1500 வழங்குவோம் என்று அறிவித்துள்ளது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானதா? என்று கேட்டபோது, ‘‘தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. இலவச திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்கும்போது, அந்த திட்டங்களை எப்படி செயல்படுத்துவது? அதற்கான நிதி ஆதாரங்களை எப்படி பெறுவது? என்ற விளக்கங்களையும் அதோடு அந்த கட்சிகள் அளிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், அதற்கான விளக்கத்தை அந்த கட்சிகளிடம் இந்திய தேர்தல் ஆணையம் கேட்கும். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பதாக ஏற்கனவே செயல்படுத்துகிற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தலாம். ஆனால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு, அந்த திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்க முடியாது’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்