SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படப்பிடிப்பு பகுதியில் தள்ளுமுள்ளு விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி: காசிமேட்டில் பரபரப்பு

2019-03-20@ 00:20:44

பெரம்பூர்: காசிமேடு கடற்கரை பகுதியில் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ரசிகர்கள் பலர் காயமடைந்தனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக வார்ப்பு கடற்கரை பகுதியில், நடிகர் விஜய்யின் 63வது திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அட்லி இயக்குகிறார். இப்படப்பிடிப்பை காண்பதற்காக விஜய் ரசிகர்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோர் காசிமேடு மீன்பிடி துறைமுக வார்ப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை திரண்டனர்.

அவர்கள், விஜயை பார்க்கும் ஆர்வத்தில் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றதால் ரசிகர்களுக்கும், காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்  ஏற்பட்டது.அப்போது திடீரென போலீசார், ரசிகர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில், “விஜயை  பார்ப்பதற்காக மாலை 4 மணியில் இருந்து காத்திருந்தோம். ஆனால் போலீசார் எங்களை பார்க்க அனுமதிக்காமல் எங்கள் மீது தடியடி நடத்தினர்” என்று வேதனையுடன் கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்