SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2019-03-20@ 00:20:05

* ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி மே 12ம் தேதி சென்னையில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடக்க போட்டி மற்று பைனல் சென்னையில் நடைபெற உள்ளது  ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
* ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி நீடிப்பது உண்மையிலேயே அதிர்ஷ்டவசம் தான். கேப்டனாக டோனி, ரோகித் செயல்பாட்டுடன் ஒப்பிடுகையில், கோஹ்லியின் வியூகங்கள் அந்த  அளவுக்கு பலனளிப்பதாக இல்லை என்று முன்னாள் நட்சத்திரம் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
* உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி பேட்டிங் வரிசையில் 4வது வீரராக ரிஷப் பன்ட் களமிறங்க வேண்டும் என்று சவுரவ் கங்குலி, ரிக்கி பான்டிங் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* அபு தாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக விளையாட்டு போட்டித் தொடரில், இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை சபிதா யாதவ் (கோவா) ஒற்றையர் பிரிவில் தங்கம் மற்றும் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்  பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
* பெடரேஷன் கோப்பை தடகள போட்டித் தொடரின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், நட்சத்திர வீராங்கனை டூட்டி சந்த் 11.48 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மகளிர் 400 மீட்டர்  ஓட்டத்தில் ஹிமா தாஸ் முதலிடம் பிடித்தார்.
* அர்ஜுன் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விளையாட்டில் எதையும் உறுதியாக சொல்ல முடியாது. அவர் தனது இலட்சியத்தை எட்ட கடுமையாக உழைக்க வேண்டும்’ என்று  தனது மகனின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் அர்ஜுன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்