SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ேசலம் வாழப்பாடி அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற 5 பேரும் குற்றவாளிகள்

2019-03-20@ 00:13:38

* மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு
* தண்டனை நாளை அறிவிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி பெற்றோருடன் 2014 பிப்ரவரி 14ம்தேதி இரவு தூங்கிக்கொண்டிருந்தார். மிகவும் ஏழையான  பெற்றோர், வீட்டின் கதவை பழுது பார்க்க அதனை கழற்றி வைத்திருந்தனர். சிறிய துணியை கொண்டு வாசலை மூடி வைத்திருந்தனர். அதிகாலையில் தந்தை எழுந்து பார்த்தபோது மகளை காணவில்லை. ஊர் முழுக்க தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவில் கரடு என்ற இடத்தில் சிறுமி மரம் ஒன்றில் தூக்கில் நிர்வாண நிலையில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.  வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த பாமகவை சேர்ந்த பூபதி (31), சினேக்பாபு என்ற ஆனந்தபாபு (29), ஆகியோர் விஏஓ முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆனந்த்(22), அண்ணன் தம்பிகளான பிரபாகரன்(26), பாலகிருஷ்ணன்(29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அச்சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொன்று தூக்கில் தொங்க விட்டதாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

இவர்களில் பூபதி, சினேக்பாபு என்ற ஆனந்தபாபு, பிரபாகரன் ஆகியோர் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி விஜயகுமாரி அறிவித்திருந்தார். நேற்று மாலை 4 மணிக்கு குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது நீதிபதி விஜயகுமாரி, ‘‘உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.  இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’’ என கேட்டார். அப்போது அவர்கள், ‘‘நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்’’ என்றனர். இதையடுத்து 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, தண்டனை விவரம்  நாளை (21ம்தேதி) தெரிவிக்கப்படும் என அறிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்