SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியால் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

2019-03-20@ 00:13:32

சென்னை: 'கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியில் ஆளும்  பாரதிய ஜனதா கட்சி, நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் சீர்குலைத்து  விட்டதன் விளைவாக இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது' என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன் பேசியதாவது:
கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் சீர்குலைத்து விட்டதன் விளைவாக இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாடு இதுவரை சந்தித்திடாத வேலையில்லா திண்டாட்டம். பணவீக்கம் கடுமையாக அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த கொடுமை. வேளாண் துறையும், அமைப்புசாரா துறைகளும் வெகுவாக நலிந்து விட்ட அவலம். தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஆளும் அதிமுக அரசின் மோசமான நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ள கேடுகளையும், ஊழல்களையும் மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளாமல், மாநில அரசுக்கு ஆதரவு அளிப்பதோடு அவர்கள் மீதான் ஊழல் புகார்களைப் பற்றியும் கவலைப்படாமல் பாதுகாப்பதால் தமிழகத்தின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

தற்போது திமுக சார்பில் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையின் வாயிலாக நேர்மை பிறழாத, நடுநிலையான நிர்வாகத்தையும் மதச் சார்பற்ற அரசை உருவாக்க நாட்டு மக்களுக்கு திமுக உறுதி அளிக்கிறது. தமிழக மக்கள் மட்டுமல்லாமல், அனைத்திந்திய அளவிலும் மக்களின் எதிர்ப்பார்ப்புகளையும், எண்ணங்களையும் முழுமையாக நிறைவேற்றிடும் நோக்கில் வாக்குறுதிகளை திமுக அளிக்கிறது. இந்தத் தேர்தல் அறிக்கை முழுமையாக வெளிவருவதற்கு பாடுபட்டு, பணியாற்றி அதிலே வெற்றி கண்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சரும், முதன்மைச் செயலாளரும் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவரான டி.ஆர்.பாலு, அந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கும் துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், துரைசாமி, மாநிலங்களவை குழு தலைவர் மகளிரணி செயலாளர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் இராமசாமி, மேலும் இந்தக் குழுவுக்கு எல்லா நேரங்களிலும் உணவின்றி, உறக்கமின்றி பணியாற்றிய வேலுமணிக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்முறை ஆன்லைன் மூலமாக பொதுமக்கள் தங்களுடைய எண்ணங்களை தேர்தல் அறிக்கைக்கு அனுப்பலாம் என வேண்டுகோள் எடுத்து வைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் பலர் பல ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றிகள். அதேபோல் விவசாய சங்கங்கள், வர்த்தக சங்கங்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், நம் தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் இருக்குமே தவிர, வில்லனாக நிச்சயம் இருக்காது. இதனை மக்களிடம் கொண்டு செல்லும் பத்திரிகை ஊடகத் தோழர்களுக்கு என் இதயபூர்வமான நன்றியை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார். நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் சீர்குலைத்து விட்டதன் விளைவாக இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-07-2019

  23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்