SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து அறிவிப்பும் மத்திய அரசை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது

2019-03-20@ 00:13:28

* 37 எம்பிக்கள் கடந்த 5 ஆண்டு என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேள்வி

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் மொத்தம் 38 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒன்றுகூட அதிமுக வெற்றிபெற்றால் செய்யும் என்று உறுதி அளிக்கப்படவில்லை. அனைத்தும் அறிவிப்புகளுமே மத்திய அரசை வலியுறுத்துவோம் என்ற அறிவிப்பாகவே உள்ளது. அப்படியென்றால் கடந்த 5 ஆண்டு காலம் மத்தியில் 37 அதிமுக எம்பிக்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்று பொதுமக்கள் கேள்வி கேட்டனர். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1,500, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, நீர்மேலாண்மை திட்டம், பொருளாதார கொள்கை, கல்வி கொள்ைக, பொது விநியோக திட்டம், மகளிர் நலன், மீனவர் நலன், தொழிலாளர் நலன், இளைஞர் நலன், ஈழ தமிழர்கள் உரிமைகள், கச்சத்தீவு, மதசார்பின்மை, மொழிக்கொள்கை, நதிகள் இணைப்பு, மின் உற்பத்தி திட்டங்கள், மாசு கட்டுப்பாடு, சிறுபான்மையினர் நலன், குடிநீர், சாலை போக்குவரத்து, ரயில்வே, நவீன விமான நிலையங்கள், மின் ஆளுமை, பறக்கும் கப்பல் திட்டம், வருமான வரி விலக்கு என 38 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 38 அறிவிப்புகளில் ஒரு அறிவிப்பில் கூட, தமிழகத்தில் அதிமுக எம்பிக்களை வெற்றிபெற செய்தால் இந்த திட்டங்களை நிறைவேற்றி தருவோம் என்று ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. 38 அறிவிப்புகளிலும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது, மத்திய அரசை வலியுறுத்தும் என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது.

இது அதிமுக தொண்டர்கள் மற்றும் அந்த கூட்டணி கட்சி தொண்டர்களையே முகம் சுழிக்க வைத்துள்ளது. இது குறித்து அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் கூறியதாவது: 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களில் அதிமுக வெற்றிபெற்றது. இந்த 37 எம்பிக்களும் 5 ஆண்டுகளும் பாராளுமன்ற கூட்டத்திலும் பங்கேற்றனர். இந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசை வலியுறுத்திகூட தமிழகத்துக்கு பெற்றுத்தரவில்லை. நீட் தேர்வு, கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, நதிகள் இணைப்பு, ரயில்வே பணிகள், வருமான வரி விலக்கு என எதையும் தமிழக மக்களுக்காக பெற்றுத்தரவில்லை. இந்த நிலையில் இப்போது நடைபெறும் தேர்தலில் மட்டும் இவர்கள் வெற்றிபெற்றால் எப்படி தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கும். வழக்கம்போல், தமிழக அரசை காப்பாற்றிக்கொள்ள மத்திய அரசுக்கு ஜால்ராதான் அடிக்கப்போகிறார்கள். சாதாரண தேர்தல் அறிக்கையில்கூட இந்த திட்டத்தை நிறைவேற்றி தருவோம் என்று உறுதியாக கூற முடியாத இவர்களால், எப்படி வெற்றிபெற்றால் தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கப்போகிறது என்று ஆதங்கத்துடன் கூறினார்கள்.

வருமான வரி விலக்கு ரூ.8 லட்சம் உயர்த்துங்கள்

அதிமுக தேர்தல் அறிக்கையில், வருமான விலக்கு வரம்பை 8 லட்சமாகவும், நிலையான கழிவினை ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்பட வேண்டும் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பதை மாற்றி, மத்திய அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டுமேன்று மத்திய அரசை அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்