SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐபிஎல் கிரிக்கெட் பயிற்சியின்போது மைதானத்திற்குள் புகுந்து டோனியை கட்டிப்பிடித்த கல்லூரி மாணவன் கைது: சேப்பாக்கத்தில் பரபரப்பு

2019-03-19@ 00:26:54

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் பயிற்சியின்போது தடையை மீறி மைதானத்திற்குள் நுழைந்து, கிரிக்கெட் வீரர் டோனியை கட்டிப்பிடித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது ெசய்தனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணிகளாக பிரிந்து சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் பயிற்சி மேற்கொண்டனர். இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். ஒத்திகைப் போட்டி ேநற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடிவடைந்தது. போட்டியை காண மைதானத்திற்குள் இரண்டு பகுதிகளில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.போட்டி முடிவடைந்ததும் ரசிகர் ஒருவர், போலீசாரின் தடையை மீறி இரும்பு தடுப்பு சுவரை தாண்டி குதித்து மைதானத்திற்குள் ஓடி விளையாடிக் கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனியை கட்டிப்பிடிக்க முயன்றார்.

அப்போது, டோனி ஓடி வந்த ரசிகரை கைகுலுக்கிவிட்டு கட்டி பிடித்துவிட்டு சென்று விட்டார். பின்னர் தடையை மீறி மைதானத்திற்குள் சென்ற ரசிகரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து திருவல்லிக்கேணி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மதுரை மாவட்டம் மாகாளிபட்டியை சேர்ந்த அரவிந்த்குமார் (21) என்றும், இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வருவது தெரியவந்தது. இவர் ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார்.  தனது சகோதரருடன் ஐபிஎல் போட்டியை காண பார்க்க வந்தது ெதரியவந்தது. இதை தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள்  ெசன்றதாக கல்லூரி மாணவன் அரவிந்த்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் போது மைதானத்திற்குள் செருப்பு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டது. இதனால் இந்த ஆண்டு இதுபோன்ற எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-09-2019

  20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • motor_strike1

  புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

 • jellifish_shapee1

  உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

 • malar_palam11

  கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

 • banglore_fire11

  பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்