SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலை கட்சியில சீட் கிடைக்காதவங்க குழிபறிக்க தொடங்கியதை சொல்கிறார்: wiki யானந்தா

2019-03-19@ 00:11:56

‘‘யாரிடம் பேசறீங்க பீட்டர்...’’ என்று சிரித்தபடியே கேட்டார் விக்கியானந்தா.‘‘அது பர்சனல்... தேர்தல் நடத்தி முடியறதுக்குள்ள தமிழகத்தின் இரண்டு விவிஐபிக்களுக்கும் விழி பிதுங்கிடும் போலிருக்கே... சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலில் கீழ் இறங்கி மற்ற கட்சிகளிடம் பேசும்போதே இலை  கட்சியின் சரிவு ஆரம்பித்ததாக அக்கட்சியினர் சொல்றாங்க... இப்போ சீட் கொடுக்காததால பலர் சொந்த கட்சிக்கே குழி பறிக்க தொடங்கிட்டாங்க... எங்களுக்கு சீட் கொடுக்கலைன்னா உங்களை காலி செய்துடுவோம்.. எங்கள்  ஆட்கள் இலை கட்சிக்கு வேலை செய்ய மாட்டாங்கனு சொல்லிட்டாங்களாம்... ஆனால் சேலம் விவிஐபி, குக்கரின் ஸ்லீப்பர் செல்கள் யாருன்னு கண்டுபிடிச்சு அவங்களை தவிர்த்து மற்றவர்களுக்கு சீட் கொடுத்தாங்களாம்... அதுல  70 சதவீதம் பேரு சேலம் விவிஐபி ஆளுங்களாம்... 30 சதவிதம் தான் தேனி விவிஐயின் ஆட்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘இடைத்தேர்தல் பார்முலாவை குக்கர் கையில் வைச்சிருக்காமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘எனக்கு கிடைச்ச உளவு தகவலை சொல்றேன்... நாடாளுமன்ற தேர்தலை கண்டுக்க வேண்டாம்.. இடைத்தேர்தலுக்கு செல்வாக்குள்ள நபர்களை நிறுத்து பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்... ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம்  கொடுக்கணும்னு சிறை பறவை சொன்னதாக குக்கர் கட்சி தொண்டர்கள் சந்தோஷமாக சொல்லி சிரிக்கிறாங்க... அதனால இடைத்தேர்தல் நடக்கும் பகுதியில் உள்ள நிர்வாகிகள் அதில் எவ்வளவு சுருட்ட முடியும்னு இப்பவே  யோசிக்க ஆரம்பிச்சு இருக்காங்களாம்... இது குறித்து உளவுத்துறை மற்றும் ஐடிக்கு தகவல் போயிருக்காம்... அதை தடுப்பது குறித்து அவர்களும் ஆலோசனை நடத்தி வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நாகர்கோவில் என்றாலே அரசியல்வாதிகள் அலறுகிறார்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ நாகர்கோவில்ல அதிகாரிகள் தரப்பில் தேர்தலில் குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது கொடிக்கம்பங்களை மறைக்க வேண்டும் என்ற உத்தரவு கட்சியினருக்கு  சென்று சேரும் முன்னரே நகர பகுதி முழுவதும் 52 வார்டுகளிலும் 300க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்களை மாநகராட்சி அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இது மிகப்பெரிய சர்ச்சையை  ஏற்படுத்திவந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக காமராஜர், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், தாணுலிங்கநாடார் என்று தலைவர்கள் கொடியேற்றிய விபரங்களுடன் கூடிய கல்வெட்டுகளை தாங்கிய  எஞ்சியிருந்த பீடங்களையும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் மாநகராட்சி பணியாளர்கள் இடித்து அப்புறப்படுத்தினர். இது இப்போது அனைத்து கட்சியினரையும் போராட்டம் நடத்தும் அளவுக்கு பிரச்னையை  விஸ்வரூபமாக்கியுள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பல பிரச்னைகளுக்கு அதிகாரிகள்தான் காரணம் என்பதையே இது நிரூபிக்கிறது... அப்புறம் சாப்பாட்டுல கை வைச்ச மேட்டர் இருக்குன்னு சொன்னீயே என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இதற்காக வேலூர் எஸ்பி, ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உட்பட 600 போலீசார் கடந்த 5ம் தேதி காலையில் இருந்தே காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர்.
இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ஒரு நாள் உணவுக்கு ₹250 ஒதுக்கீடு செய்யப்பட்டதாம். ஆனால் உயர் போலீஸ் அதிகாரிகளை தவிர்த்து, எஸ்ஐகள், எஸ்எஸ்ஐகள், தலைமை காவலர்கள், ஆயுதப்படை  போலீசார் ஆகியோருக்கு வேகாத தயிர் சாதம், தக்காளி சாதம் வாங்கிக்கொடுத்துவிட்டு, ஒருவருக்கு ₹250 உணவுக்கு செலவு செய்ததாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கல்லா கட்டிவிட்டாராம்... பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட  போலீசாரின் சாப்பாட்டில் கை வைத்த, போலீஸ் உயர் அதிகாரியின் இந்த செயலால், பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய போலீசார் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சாப்பாட்டில் கை வைக்கலாமா... அவங்க வயிற்று எரிச்சலை கொட்டிக்கலாமா... சரி அல்வா நகர மேட்டரை சொல்லு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்தத் தொகுதி இடைத் தேர்தலை சந்திக்கிறது. இந்த தொகுதியின் அமமுக வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட உமா  மகேஸ்வரிக்கு மீண்டும் சீட் வழங்கலாமா என டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக யோசித்து வருகிறது. இந்நிலையில் முந்திக் கொண்டு அதிமுக வேட்பாளரை இலை கட்சி அறிவித்து விட்டது. இலை கட்சியின்  வேட்பாளர் இபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏ. ஏற்கெனவே இபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏவும் தங்களுக்கு தான் சீட் என மார் தட்டிக் கொண்டு தொகுதியில் திரிந்தனர். தற்போது  இபிஎஸ் ஆதரவு மாஜிக்கு சீட் கிடைக்க, அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ் ஆதரவு மாஜிக்கு அமமுக வலை விரித்துள்ளதாம். இதனால் ஆளும் தரப்பு இப்போதே ஆடிக்கிடக்கிறது... இந்த மோதல் வாக்கு பதிவு வரை  இருக்கப்போகிறது...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்