SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின் ட்...

2019-03-19@ 00:11:03

* கிரிக்கெட் விளையாட்டில் எம்.எஸ்.டோனி மகத்தான சாதனையாளர். வளர்ந்து வரும் வீரரான என்னை அவருடன் ஒப்பிடாதீர்கள் என்று ரிஷப் பன்ட்’ கூறியுள்ளார்.
* கிரிக்கெட் விளையாட்டு காலத்துக்கேற்ப பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு வருகிறது. இன்றைய நிலையில் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களுக்கான தேவை இருப்பதால்,  இந்திய அணியில் என்னால் இடம் பெற முடியவில்லை. மற்றபடி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நான் சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளேன்’ என்று நட்சத்திர வீரர்  ஆர்.அஷ்வின் தெரிவித்துள்ளார்.
* இலங்கை மகளிர் அணியுடன் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பாந்தோட்டை ராஜபக்சே  ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாசில் வென்று பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 33.3  ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீராங்கனை ஏமி ஜோன்ஸ் 54, பியூமான்ட் 43, வின்பீல்டு 44 ரன் விளாசினர்.
* தென் ஆப்ரிக்கா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கேப் டவுனில் இன்று நடைபெறுகிறது. தென் ஆப்ரிக்கா: டு பிளெஸ்ஸி (கேப்டன்), டி காக் (விக்கெட்  கீப்பர்), டுமினி, ஹெண்ட்ரிக்ஸ், தாஹிர், மார்க்ராம், மில்லர், லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்ட்ஜே, பெலுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், ரபாடா, ஷம்சி, டேல் ஸ்டெயின்,  வான் டெர் டுசன்.
* நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நடத்தை விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஐரோப்பிய கால்பந்து  கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
* இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகத்துடன் இணைந்து 6 மாதங்களுக்கு செயல்பட திட்டமிட்டுள்ளது.
* ஐபிஎல் டி20 தொடரில் இந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று அந்த அணியின் அங்கித் ராஜ்பூட் நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.
* இண்டியன் வெல்ஸ் தொடரில் பெடரரை வீழ்த்திய டொமினிக் தீம், ஏடிபி தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார். பெடரர் ஒரு இடம்  பின்தங்கி 5வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முதல் முறையாக 84வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

 • 23-04-2019

  23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்