SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்வி, விவசாயத்தில் சிறந்த தொகுதி நெல்லை!: இதுவரை கடந்து வந்த பாதை

2019-03-18@ 19:55:37

நெல்லை: தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் நெல்லை நாடாளுமன்றத் தொகுதி தமிழக தேர்தல் அரசியலில் பல அதிர்வலைகளை கடந்த காலங்களில் ஏற்படுத்தியுள்ளது.1952ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்த 16 நாடாளுமன்ற தேர்தல்களிலும் இத்தொகுதி இடம்பெற்றுள்ளது. முதல் மக்களவை தேர்தலில் (1952) காங்கிரஸ் வேட்பாளர் பி.டி தாணுபிள்ளை வெற்றி பெற்றார். 2004ஆம் ஆண்டு வரை நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முதல் இத்தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பிடித்துள்ளன.

அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமே இருந்து வருகிறது. இங்கு விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என்றழைக்கப்படும் பாளையங்கோட்டை, நகரப் பகுதியான நெல்லை போன்ற தொகுதிகளை உள்ளடக்கிய இம்மாவட்டத்தில் பட்டதாரிகள் அதிகம் உள்ளனர்.பெரும் தொழில் நிறுவனங்கள் இல்லாததும், தாமிரபரணியில் தண்ணீர் இல்லாத போது இங்கு ஏற்படும் குடிநீர் பாற்றாக்குறையும் இத்தொகுதியில் முக்கிய பிரச்சனைகளாக கருதப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் எதுவும் இல்லாததால் இந்த தொகுதியை சேர்ந்த எண்ணற்ற இளைஞர்கள், தங்களின் வேலைவாய்ப்புக்காக வேறு நகரம் அல்லது மாநிலத்துக்கு புலம்பெயர்கின்றனர். நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா திட்டம் கொண்டு வரப்பட்டும் அத்திட்டம் நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டது இதற்கு ஒரு காரணமாகும். இத்தொகுதியில் அதிகமுறை (4முறை) அதிமுகவின் கடம்பூர் ஜனார்த்தனன் வெற்றி பெற்றுள்ளார்.

1998-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் நட்சத்திர வேட்பாளராக போட்டியிட்ட சரத்குமார் சுமார் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இதுவே இத்தொகுதி வரலாற்றில் குறைந்த வெற்றி வித்தியாசம் ஆகும். இந்த தொகுதியில் இதுவரை அதிமுக 7 முறை வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 முறை வென்றுள்ளது. அதில் இரண்டு முறை (2004, 2009) திமுக கூட்டணியில் காங்கிரஸ் இந்த தொகுதியில் வென்றது.திமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறையும் திமுகவின் சார்பில் ஒரே வேட்பாளர்தான் (சிவப்பிரகாசம்) வெற்றி வேட்பாளராக இருந்துள்ளார். அதேவேளையில் சுதந்திரா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-07-2019

  23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்