SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே கடத்திச் செல்லப்பட்ட தமிழக தம்பதியின் ஆண் குழந்தை மீட்பு

2019-03-18@ 17:00:17

திருமலை: திருப்பதி ஏழுமலையான் யைான் கோவில் அருகே கடத்திச் செல்லப்பட்ட தமிழக தம்பதியின் 3 மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்தவர் மகாவீரா. இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு வீரா என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. நரிக்குறவர்களான இவர்கள் திருமலை ஏழுமலையான் கோயில் அருகே கயிறு, சுவாமி படங்கள் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு திருமலையில் உள்ள எஸ்வி வணிக வளாகத்தில் தங்களது 3 மாத ஆண் குழந்தையுடன் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பார்த்தபோது அருகில் இருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் குழந்தையை பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. தகவல் அறிந்ததும், திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் திருமலை முழுவதும் தேடிப்பார்த்தனர்.

மேலும், இதுகுறித்து உடனடியாக திருமலை 2வது டவுன் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பெண் ஒருவர் மகாவீராவின் குழந்தையை தூக்கிச்செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கோவில் அருகே கடத்திச் செல்லப்பட்ட 3 மாத ஆண் குழந்தை தற்போது மீட்கப்பட்டுள்ளது. திருமலையில் ஒப்பந்த துப்புரவு ஊழியராக பணிபுரிந்த பெண் குழந்தையை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்புரவு பணி செய்யும் பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். திருமலையில் குழந்தை கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்துவருவது பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை கடத்தல் சம்பவத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்