SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தீப்பிடித்தது

2019-03-18@ 16:29:34

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகின. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பிடிப்பட்ட 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இருசக்கர வாகனகள், ஆட்டோக்கள், லாரிகள் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் சிறிது நேரத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் தீப்பிடித்து எரிந்தன. மேலும் தீயானது அதிகளவு பரவ தொடங்கியதால் 20க்கும் மேற்பட்ட வாகனகள் சேதம் அடைந்தன. பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் போராடியும் தீயை அணைக்க முடியாததால் ஓசூரில் இருந்து தீயணைப்பு துறை வரவழைக்கப்பட்டு தீ  கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் இச்சம்பவம் அடிக்கடி நடைபெறுவதால் அங்குள்ள வாகனங்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்