SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை விமானநிலைய வளாகத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

2019-03-18@ 15:43:17

கோவை: கோவை விமானநிலையத்திற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த கார் ஓன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை விமனநிலையத்திற்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கான கார்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றன. இங்கே விமானத்தில் வரக்கூடிய பயணிகளை அழைத்து செல்லவும், மேலும் வெளியே இருந்து வரக்கூடிய பயணிகளை விமானநிலையத்திற்கு கொண்டு செல்லவும் கார்கள் அதிகளவு வந்து செல்கின்றன. அதேபோன்று  இந்த விமான நிலைய வளாகத்திலே சுமார் 200 கார்கள் நிறுத்தும் அளவிற்கு ஒரு டாக்சி சங்கம் ஓன்று அமைக்கப்பட்டுள்ளது.

இன்று சுமார் ஒரு அரை மணி நேரத்திற்குமுன்னதாக ரெட் டாக்சி நிறுவனத்துக்கு சொந்தமான கார் ஒன்று இந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குற்பிப்பிடத்தக்கது. இந்த கார் ஆனது 2 மணி நேரத்திற்கு பிறகு திடீரென காரில் இருந்து புகை வெளியேறியதை அடுத்து அங்கிருந்த பயணிகள் ஒரு சிலர் வந்து அங்குள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வருவற்க்கு முன்னாடியே அந்த கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. எனவே அந்த காரை 10 நிமிடத்திற்கும் மேலாகப் போராடி அந்த தீயை தீயணைப்பு வீரர்கள்  முழுமையாக அணைத்தனர். விசாரணையில் கார் ஆனது கோவை புனியமுத்தூர் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காரை ஒட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அவர் வந்து காரை ஒரு 10 மணிக்கு அங்கே கொண்டுவந்து நிருத்தியதாகவும் மற்றும் வழக்கமாக நிறுத்தக்கூடிய இடத்தில் தான் காரை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் காரின் குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுக் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் இந்த கார் எப்படி தீப்பற்றி எரிந்தது என்று பீளமேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அதே சமயத்தில் தீயணைப்புத்துறையும் விசாரணையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்