SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகிங் அட்டூழியம்

2019-03-18@ 02:06:26

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிகளில் ராகிங் என்பது ஒரு கலாசாரமாகவே இருந்தது. அதிலும் தொழில்நுட்ப படிப்புகளாக கருதப்படும் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் ராகிங் சம்பிரதாய சடங்காகும். முதலாம் ஆண்டு மாணவர்களை தங்கள் கைப்பாவையாக சீனியர் மாணவர்கள் ஆட்டுவித்தனர். சீண்டல்கள் வெறும் வாய் வார்த்தைகளோடு நின்று விடுவதில்லை. உடல் ரீதியாக ஜூனியர் மாணவர்களை துன்புறுத்துதல், இழிவுப்படுத்துதல் என தொடர்ந்தது. கடந்த 1996ம் ஆண்டு சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர் நாவரசு படுகொலை தமிழகத்தையே உலுக்கியது. அதன் பின்னர் ராகிங் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு, கல்லூரிகளில் டீன் தலைமையில் ராகிங் தடுப்பு குழு அமைக்கப்பட்டது. அதில் பேராசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் இடம் பெற்றனர். அந்த கமிட்டி வரம்பு மீறும் சீனியர் மாணவர்களை விசாரித்து கல்லூரிகளில் இருந்து நீக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றது. அதன்பின்னர் ராகிங் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அதன் வெளிப்பாடுகள் வெவ்வேறு வடிவில் வந்தன. சமீபகாலமாக ராகிங் மருத்துவம், பொறியியல் மட்டுமின்றி கலை, அறிவியல் கல்லூரிகளில் சர்வசாதாரணமாக வெளிப்படுகிறது. அதன் எதிரொலியே இப்போது மதுரை தனியார் கல்லூரியில் ராகிங் கொடுமை காரணமாக பாரத், முத்துபாண்டி ஆகிய இரு மாணவர்கள் விஷம் குடித்து இறந்து விட்டனர். இவ்விவகாரத்தில் விஷம் குடித்த மாணவர்களை 3ம் பாலினமாக பாவித்து கிண்டல் செய்ததே காரணமாக கூறப்படுகிறது.

ராகிங் கமிட்டியும், ஆசிரியர் குழுவும் மாணவ, மாணவிகளை கல்லூரிகளில் கவனிக்கும் அளவுக்கு விடுதிகளில் கண்காணிப்பதில்லை. இதுவும் ஒருவகையில் ராகிங் முயற்சிகளுக்கு துணைபோகிறது. கல்லூரி விடுதிகளில் ஜூனியர் மாணவர்கள் பாலியல் ரீதியாக கூட அவமானப்படுத்தப்படுகின்றனர். சில கல்லூரிகள், விடுதிகளில் ஜாதி ரீதியான முத்திரைகளும் மாணவர்கள் மீது குத்தப்படுகின்றன. தென்மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் ஜாதி சார்ந்த ராகிங்கால் கொலை விழுந்த சம்பவங்களும் உண்டு. கடந்த ஆண்டு மதுரை மருத்துவக்கல்லூரி விடுதியில் 2ம் ஆண்டு மாணவர்கள் 20 பேர், முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்து ராகிங் செய்தனர். இதையடுத்து சீனியர் மாணவர்கள் 20 பேரும் கல்லூரியில் இருந்தும், விடுதியில் இருந்தும் 6 மாத காலத்திற்கு சஸ்பென்ட் செய்யப்பட்டனர். தொடரும் சம்பவங்களை பார்த்தால், இத்தகைய தண்டனைகள் மாணவர்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிகிறது. உயர்கல்வி என்பது மாணவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாகும். அதிலும் ஏழை, நடுத்தர மாணவர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து கல்லூரிகளில் படிக்க முற்படுகிற காலத்தில் ராகிங் அவர்களுக்கு பெரிய முட்டுக்கட்டை. ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். கல்வி களத்தை இதுபோன்று வேறு எதற்கும் அனுமதிக்க கூடாது என்பதில் கல்வித்துறை உறுதியாக முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

Tags:

raging

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்