SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தவிர்க்க கிண்டி அதிகாரி செய்யும் தில்லாலங்கடி குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2019-03-18@ 00:26:28

‘‘என்ன தொகுதி லிஸ்டை படிச்சுட்டு இருக்கீங்களா...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘தொகுதி பிரச்னை... கவுரவ பிரச்னை... கோயம்பேடு கட்சிக்காரருடன் மோதல் ேபான்ற காரணங்களால் அதிமுக தொகுதி அறிவிப்பு என்பது சாதாரண நிகழ்வாகவே மாறியதாம்... சில நாட்களுக்கு முன்பே இலை கட்சி சார்பில்  தொகுதி பங்கீடு பட்டியல் வெளியிடப்போறோம்... அனைத்து கூட்டணி கட்சிகளும் நேரில் வர வேண்டும்... அதிமுக தலைமையகம் இல்லாமல் பொதுவான இடத்தில் வைத்து ெதாகுதி ஒதுக்கீடு பட்டியலை வெளியிடலாம்னு  சொன்னாங்களாம்... ஆனால் கேட்ட தொகுதி கிடைக்காதது மற்றும் கொள்கை முரண்பாடுகள் காரணமாக பூ கட்சி தவிர மற்றவர்கள் தொகுதி அறிவிப்பு கூட்டத்துக்கு வரலையாம்... நாங்கள் தனியாக கூட்டம் போட்டு எங்கள்  வேட்பாளர்களை அறிவிச்சுக்கிறோம்னு காரணம் சொல்லிட்டாங்களாம்... இதனால கூட்டணி கட்சிகள் இல்லாமலேயே தொகுதி பங்ககீடு அறிவிப்பு வெளியாச்சாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அப்போ பூ கட்சி பங்கேற்றது கூட்டணி கட்சி இல்லையா.... இலை கட்சியின் நிழல் கட்சி போலதானே செயல்படுது.... குக்கரும் அறிவிச்சுட்டார் போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தன்னை நம்பி வந்தவங்களில் 9 பேருக்கு இதுவரை சீட் கொடுத்து இருக்காரு... அவர்களுக்கே மீண்டும் ஓட்டு கிடைக்கும்னு நினைக்கிறாரு... ஆனால் கள நிலவரம் வேறு மாதிரி இருக்கு... கட்சி தாவியதால தான் அவங்க  பொறுப்பு போச்சு... இதனால், தொகுதியில் எந்த வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. எனவே, மீண்டும் அவங்களுக்கே ஓட்டு போடணுமானு பொதுமக்கள் மத்தியில பேச்சு ஓடுது... அவர் அறிவிச்சதுல பலரும் பணத்தை  தாராளமாக செலவழிப்பவர்கள் தான்... அதனால பணத்துக்கு தற்போதைக்கு பஞ்சமில்ல... வாக்கு சேகரிப்பு, வாக்காளர் சந்திப்பின்போது தான் குக்கர் திணறும்னு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேர்தல் களத்துல முக்கிய கட்சிகள் எல்லாம் ெதாகுதி பட்டியலை வெளியிட்டுச்சு... நடிகர் என்ன செய்யறாரு...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஆழ்வார்ேபட்டையை சேர்ந்தவர் பெரும் குழப்பத்தில் உள்ளாராம்... வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்பது நம்ம பாலிசி... ஆனால் பிரசாரம், தொண்டர்களுக்கு உணவு, தினப்படி, மைக்செட், வாகன செலவுக்கு யார்  பணம் கொடுப்பா... ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் கோடிக்கணக்கில் பணம் கடன் வாங்கி செலவு செய்யலாம்... முகத்தை காட்டி ஓட்டு வாங்கலாம்னு நிைனச்சா அது பகல் கனவாகத்தான் முடியும் என்பதால்,  சினிமாவில் சம்பாதித்த பணத்தை தேர்தலில் செலவு பண்ண தயக்கம் காட்டுறாராம்...தேர்தல் செலவுக்கு கட்சி நிர்வாகிகள் பணம் கேட்டால், பொறுங்க எலக்‌ஷன் சூடுபிடிக்கட்டும் பார்க்கலாம்னு நழுவராறாம் நடிகர்... அதனால விருப்ப மனு தாக்கல் செய்தவங்க எல்லாம் அப்செட்டாம் போங்க...’’ என்றார்  விக்கியானந்தா.

‘‘ கிண்டி மாளிகையில என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிண்டி கவர்னர் மாளிகையில் செயலாளர் பிரிவு அதிகாரியாக இருப்பவர் பாம்பின் பெயரை கொண்டவர். இவர் தனி நிலை செயலாளர் பதவி  வழங்கக்கோரி மனு அளித்தார். இந்த மனுவை கவர்னர் அலுவலகம் நிராகரித்து விட்டதுடன், கால்நடை துறைக்கு இடமாற்றம் செய்தது. இதை எதிர்த்து நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்ததால், இடமாற்றத்திற்கு தடை  விதிக்கப்பட்டது. ஆனால், பணி நியமனம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அமல்படுத்தாததால், சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாம்பு பெயர் கொண்டவர் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தொடர்ந்தார். இது தொடர்பாக கவர்னர் மாளிகையின் கூடுதல் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்தது. இதனால் கடும் கோபமான உயர் அதிகாரி பணியாளர்களை பலிகடா ஆக்கும் நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகிறாராம். ஊட்டி மாளிகையில் இருந்த சார்புநிலை செயலாளர் ஒருவருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புகார் கொடுத்த பாம்பு பெயரை கொண்டவரை ஊட்டிக்கு இடமாற்றம் செய்து  உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நீதிபதி முன் ஆஜராகும்போது சில விளக்கங்களை தெரிவிக்க தயார் செய்து வைத்துள்ளாராம். அதாவது, பாம்பின் கோரிக்கை மனுவை தனது கவனத்திற்கு கொண்டு வராத ஊழியரை ஊட்டிக்கு இடமாற்றம்  செய்துவிட்டேன், துணை செயலாளருக்கு மெமோ கொடுத்து விட்டேன் என்றும், எந்தவிதத்திலும் நீதிமன்ற உத்தரவை நான் மீறவில்லை என்று கூற திட்டமிட்டுள்ளாராம்.

மேலும், தன் மீது புகார் கொடுத்த பாம்புகாரரையும் சில மாதங்களில் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்ப திட்டம் தீட்டி வருவதாகவும் கூறப்படுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோயம்பேடு கட்சியில நட்சத்திர பேச்சாளர் லிஸ்ட் ரெடியாகிடுச்சா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘எல்லாம் ரெடியாகிவிட்டது. இதுல புதுசா கட்சி தலைவரின் வாரிசும் இடம் பெற்றுள்ளாராம்... அவரை தான் தமிழகம் முழுக்க களம் இறக்கப்போறாங்களாம்... அதிலும் குறிப்பாக கோயம்பேடு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட  ெதாகுதியில் மட்டும் அதிக கவனம் செலுத்தி பிரசாரம் செய்யப்போறாராம்... அதனால நட்சத்திர பேச்சாளர் பட்டியல்ல அவரு பெயரும் முதல் பத்துக்குள்ள இருக்காம்... கோயம்பேடுகாரர் சில இடங்களில் மட்டும் சில நிமிடங்கள்  மட்டும் பேசுவாராம்... அதற்கு அமெரிக்க டாக்டர்களிடம் ஒப்பீனியன் கேட்டார்களாம்... ரொம்ப ஸ்டிரைன் பண்ண வேண்டாம்... முடிந்த அளவு பேச சொல்லுங்க... அவரை முன்னிறுத்தி எதையும் செய்யாதீங்கனு சொன்னாங்களாம்...  அதனால யுடியூப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இனி அவரை பார்க்கலாம்... அவரது பேச்சை கேட்கலாம்... பொது மேடைகளில் அதிகமாக அவரை ஏத்தமாட்டாங்கனு அவங்க தொண்டர்களே  பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் இரண்டும் சேர்ந்து வருவதால் ரொம்பவே வித்தியாசமான தேர்தலாகவே இருக்கும்போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வழக்கமாக எம்பி தேர்தல் மாநில ஆளுங்கட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாக இருக்காது... ஆனால் இடைத்தேர்தல் முடிவு மாறினால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி... நாடாளுமன்ற தேர்தல் முடிவு  மாறினால் டெல்லியில் ஆட்சி மாற்றம் என்ற வித்தியாசமான தேர்தலை தமிழக மக்கள் இப்போது சந்திப்பது விசித்திரமாகவே உள்ளது...’’ என்றார் விக்கியானந்தா..


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்