SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒழுங்கு நடவடிக்கை

2019-03-17@ 00:18:52

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அண்மையில் நடந்த இளம்பெண்கள் பலாத்காரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தைவிட இந்த வழக்கில் புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதோடு,  வழக்கு புலன் விசாரணையின் தொடக்கத்திலேயே விசாரணையை பாதிக்கும் வகையில் 4 பேர் மட்டுமே குற்றவாளிகள், 4 வீடியோக்கள் மட்டும் வெளியாகியுள்ளன என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவரே தகவல் வெளியிட்டது அதைவிட கொடுமை. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இடைக்கால இழப்பீடாக ₹25 லட்சம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் கவனக்குறைவாக செயல்பட்ட மாவட்ட காவல் துறை  கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.  

ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், பொதுமக்கள் வாழ்வில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றுகிறது. கல்வி, தகவல் தொடர்பு என பல்வேறு நன்மைகள் இருந்தும், தீமைகள்  அதிகளவில் உள்ளன. பாலியல் உள்பட பல்வேறு கொடுமையான குற்றங்களுடன் தொடர்புடைய வீடியோக்கள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரப்பப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில்  பாலியல் உள்பட கொடூரமான குற்றங்களில் தொடர்புடைய வீடியோக்கள், புகைப்படங்கள், ஒலிப்பேச்சுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.‘‘பொள்ளாச்சி விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. துணிச்சலாக முன்வந்து புகார் அளித்த அந்தப்பெண்ணின்  அடையாளத்தை விதிகளும், உத்தரவுகளும் இருந்தும் வெளியிட்டது ஏன்? இவ்வாறு செய்தால் இதுதொடர்பாக புகார் அளிக்க இனி யார் முன்வருவர்?’’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சமுதாயத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடக்கும்போது, அதை தடுக்கவும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின்கீழ் உரிய தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. அந்த  கடமையில் இருந்து தவறும் காவல் துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவசியத்திலும் அவசியமாகிறது. இதை அரசு எடுக்கும் என்றே நீதிமன்றம் போல் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்