SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்போன் அணுகுண்டு

2019-03-16@ 00:16:16

உலகம் கையில் அடங்கிவிட்டது. அனைத்து தகவல்களையும் உட்கார்ந்த இடத்தில் இருந்து நம்மால் பெற முடிகிறது. விஞ்ஞான வளர்ச்சி வியப்பை தருகிறது. ஆக்கப்பூர்வமாகவும் இது மனிதர்களுக்கு பயன்படுகிறது. ஒரு பொருள் உயர்ந்த நோக்கத்துக்காக படைக்கப்பட்டது என்றாலும் மனிதனின் எதிர்மறை எண்ணங்களால் அதை உள்நோக்கத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வரிசையில் தற்போது முதலிடம் பிடித்துள்ளது செல்போன். பாக்கெட்டில் பேனா இருக்கிறதோ இல்லையோ எல்லோரிடமும் செல்போன் ஆக்கிரமித்துவிட்டது. இதற்கு வயது வித்தியாசமின்றி அனைவரும் அடிமைகளாகிவிட்டனர். காலை கண்விழித்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை செல்போனில் தான் பொழுதை கழிக்கின்றனர்.
செல்போனில் அமைந்துள்ள பல்வேறு செயலிகளின் அம்சங்களை இளைஞர்கள்,

கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளி மாணவர்கள் என்று அனைவரும் பயன்படுத்துகிறார்கள். தேடல் செயலியில் தவறாக ஒரு வார்த்தையை கொடுத்துவிட்டாலும் அது மோசமான வெப்சைட் இணைப்புக்கு கொண்டு சென்றுவிடுகிறது. இதை பார்க்கும் சிறுவர்களின் பிஞ்சு மனதில் நஞ்சு விளைத்தது போன்று அவர்கள் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். அதன் பிறகு கலகலப்பாக விளையாடும் சிறுவர்கள் ஏதோ சிந்தனையில் தனிமையாகிவிடுகிறார்கள். பள்ளியில் சக மாணவியுடன் இனம் புரியாத ஈர்ப்பில் ஈடுபட்டு தவறுகள் நடப்பது பெருகிவிட்டது. ஊடகங்கள், பத்திரிகைகள் கூட சமூக பொறுப்பை உணர்ந்து செய்திகள் வெளியிட்டாலும், சமூக ஊடகங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த செய்தியையும், வீடியோவையும் அப்லோட் செய்ய முடியும். இதனால் உலகம் முழுவதும் அது பரவுகிறது. இதற்கு வழிமுறையை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். செல்போன் கலாச்சாரத்தின் விளைவால் தான் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் போன்று பல சம்பவங்கள் ஏற்படுகின்றன. இது சமூகத்தின் அமைதியையும், தனி மனிதன் எண்ணத்தையும் மாசு படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி தான் மதுரை உயர்நீதிமன்ற கிளை, அணுகுண்டை போல ஆபத்தானது செல்போன் என்று கண்டனம் தெரிவித்துள்ளது. முகநூல், வாட்ஸ்ஆப் பயன்பாடுகள் அதிகரித்துவிட்ட நிலையில் சைபர் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இது குறித்து விசாரிக்க சைபர் கிரைம் என்ற தனிப்பிரிவு போலீஸ் செயல்பட்டாலும் குற்றங்களை தடுக்க எந்த வழிமுறையும் இல்லாமல் இருக்கிறது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விலையுயர்ந்த செல்போன் வாங்கி கொடுத்து அவர்களின் எதிர்காலத்துக்கு அவர்களே ஆப்பு வைக்கிறார்கள் என்பது தான் உண்மை. சமூகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியன குறித்த அறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பள்ளி மாணவர்கள் செல்போனில் வரும் வதந்திகளையும், புனையப்பட்ட வீடியோக்களையும் உண்மை என்று நம்பி பாதை மாறி செல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே மாணவர்களின் எதிர்காலத்தையும், ஆரோக்கியத்தை கருதியும், சமூக சீரழிவை தடுக்க கருதியும் இணையதள சேவை, சமூக வலைதள சேவை பயன்பாட்டில் விதிமுறைகள் வகுத்து செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பது சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்