SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு; முழு விவரம் இதோ...

2019-03-15@ 12:45:26

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-2,  விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1, கொமதேக 1, ஐஜேகே 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு  ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எவை என்பது தொடர்பாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கட்சி, கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பதில் உடன்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து இன்று அண்ணா அறிவாலயத்திற்கு திமுக கூட்டணி தலைவர்கள் வருகை தந்தனர். வைகோ, பாரிவேந்தர், திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வருகை தந்தனர். கூட்டணி கட்சி தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முழு பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக போட்டியிடும் தொகுதிகள்;

1. சென்னை வடக்கு
2. சென்னை தெற்கு
3. மத்திய சென்னை
4. ஸ்ரீபெரும்புதூர்
5. காஞ்சிபுரம் (தனி)
6. அரக்கோணம்
7. வேலூர்
8. தர்மபுரி
9. திருவண்ணாமலை
10. கள்ளக்குறிச்சி
11. சேலம்
12. நீலகிரி (தனி)
13. பொள்ளாச்சி
14. திண்டுக்கல்
15. கடலூர்
16. மயிலாடுதுறை
17. தஞ்சாவூர்
18. தூத்துக்குடி
19. தென்காசி (தனி)
20. திருநெல்வேலி

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்;

1. புதுச்சேரி
2. சிவகங்கை
3. கன்னியாகுமாரி
4. விருதுநகர்
5. தேனி
6. திருச்சிராப்பள்ளி
7. கரூர்
8. கிருஷ்ணகிரி
9. ஆரணி
10. திருவள்ளூர் (தனி)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி;

1. மதுரை
2. கோயம்புத்தூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி;

1. திருப்பூர்
2. நாகப்பட்டினம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி;

1. விழுப்புரம் (தனி)
2. சிதம்பரம் (தனி)

மதிமுக;

* ஈரோடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி;

* ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

* நாமக்கல்

ஐஜேகே;

* பெரம்பலூர்


மு.க.ஸ்டாலின் பேட்டி

திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களும் 17-ம் தேதி அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

பொள்ளாச்சி விவகாரம் - தீர்மானம்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மதசார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்