SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூசிலாந்தில் 2 மசூதிகளில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 40 பேர் உயிரிழப்பு

2019-03-15@ 12:15:45

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் 2 மசூதிகளில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். கிறைஸ்ட்சர்ச்சில் அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர்  காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். ஓட்டலில் இருந்து அவர்கள் ஒரு பேருந்தில் சென்றனர். அதிலிருந்து இறங்கி, மசூதியின் உள்ளே நுழைந்தபோது, அங்கு பயங்கரமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இதில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.

இதைக்கண்ட பங்களாதேஷ் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பதறிய அவர்கள் உடனடியாக தரையில் படுக்க வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து பத்திரமாக ஓட்டல் அறைக்குத் தப்பி சென்றனர். துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அந்தப் பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதற்கிடையே, பங்களாதேஷ் - நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 3வது டெஸ்ட் போட்டி, நாளை நடப்பதாக இருந்தது. இந்தப் போட்டி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக நியூசிலாந்து போலீசார் தகவல் அளித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்