SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

50% வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

2019-03-15@ 12:04:10

புதுடெல்லி: 50% வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 50% வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுத்துள்ளன. வரும் மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்வதற்கான வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஒரு தொகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் ஒப்புகைச்சீட்டுகளை சரிபார்த்துக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், ஒப்புகைச்சீட்டுகளை 50% வாக்குப்பதிவு இயந்திரங்களில் சரிபார்க்க வேண்டுமென்று 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.

திமுக தலைவர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார், காங்கிரஸ் கட்சி சார்பில் கே.சி.வேணுகோபால், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரக் ஓ பிரெய்ன், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் உதவுவதற்காக ஒரு மூத்த அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும் என கோரிய உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்