SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது

2019-03-15@ 11:57:14

காஞ்சிபுரம்: காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டுள்ளார். அறநிலையத்துறை முன்னாள் அதிகாரி வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் கைது செய்தது. சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் 8.7 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் முன்னாள் ஸ்தபதி முத்தையா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு என அண்ணாமலை என்பவர் புகார் அளித்தார்.

முன்னதாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு மூலம் 8.7 கிலோ தங்கம் அபகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதை இந்திய தொழில்நுட்பக் கழக வல்லுநர் குழு உறுதி செய்தது. இதனையடுத்து தலைமை ஸ்தபதி முத்தையா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சோமாஸ்கந்தர் சிலை விவகாரத்தில் இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பணிப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த கவிதாவை சென்னை அண்ணாநகரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட கவிதா சிறையில் அடைக்கப்பட்டார். பழனி, திருத்தணி, ஸ்ரீரங்கம் கோயில்களில் இணை ஆணையராக பணியாற்றியவர் கவிதா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்