SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டக் கோரி, மதுரை ரயில் நிலையம் முற்றுகை

2019-03-15@ 11:03:13

மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டக் கோரி, தேவர் அமைப்பினர் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். டிஎன்டி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தேவர் அமைப்புகள் சார்பில் மதுரை மாநகரில் பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

கடந்த மாதம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை ரவுண்டானாவில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட போராட்டங்களை தாங்கள் நடத்த போவதாக பார்வர்டு பிளாஃக் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் கதிரவன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரை ரயில் நிலையம் முன்பாக பார்வர்டு பிளாஃக் கட்சி, தென் இந்திய பார்வர்டு பிளாஃக் கட்சி போன்ற தேவர் சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த துவங்கினர். இவர்கள் கண்டன் கோஷங்களை எழுப்பியவாறு ரயில் நிலையத்திற்குள் முயன்று ரயிலை மறித்து போராட்டம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் ரயில் மறியலில் ஈடுபடும் அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தேவர் அமைப்புகளின் தலைவர்களை தற்சமயம் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2019

    26-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்