SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம்; 2வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்; பல்வேறு அமைப்பினரும் ஆர்பாட்டம்

2019-03-15@ 10:39:54

பொள்ளாச்சி: பொள்ளாச்சி: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுகோட்டை அரசு கல்லூரி கலை கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கலைக்க முயன்றதால் கல்லூரி மாணவிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் ரிஸ்வந்த் என்ற சபரிராஜன் (25). இவர், பேஸ்புக்கில், பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவியுடன் நட்பாக பழகினார். அந்த மாணவியை கடந்த பிப்ரவரி 12ம் தேதி, உடுமலை ரோடு ஊஞ்சவேலாம்பட்டிக்கு அழைத்து, காரில் ஏற்றிச்சென்று மாணவியின் ஆடையை சபரிராஜன் களைய, அதை அவரது நண்பர்கள் செல்போனில் படம் பிடித்தனர். அந்த படத்தை காட்டி மிரட்டி, மாணவியிடம் பணம் கேட்டனர்.

அவர், தன்னிடம் பணம் இல்லை என கூறவே, மாணவி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கசெயினை பறித்துக்கொண்டு, அவரை காரில் இருந்து இறக்கி விட்டனர். பின்னர் அடிக்கடி மாணவியின் செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணத்தை கொண்டுவந்து தரவில்லை என்றால் காரில் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டினர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த 25ம் தேதி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். வழக்கை விசாரித்த போலீசார் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திருநாவுக்கரசு கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கல்லூரிகளுக்கு விடுமுறை

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து பொள்ளாச்சி மற்றும் உடுமலைபேட்டையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வெளியேற உத்தரவு

பொள்ளாச்சியில் விடுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தை அடுத்து கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்