SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்கு கண்டனம்: எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வலுக்கும் கோரிக்கை

2019-03-15@ 10:29:38

பொள்ளாச்சி: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இரண்டாவது நாளாக பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விடுதியில் தங்கியிருக்க கூடிய மாணவர்கள் வெளியேற வேண்டும் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த பகுதி எஸ்.பி-யை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தை பொறுத்த வரையில் பூதாகரமாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் நாள்தோறும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சம்பவத்தை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட பெண்கள் 272 பேர், 1500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருக்கின்றன என்பது பல்வேறுடைய கருத்தாக இருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் பலரும் கூறி வருகிறார்கள். புகாரும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் காவல்துறை இதை கண்டுகொள்ளாமல் எங்கே சென்றது என்ற கேள்வியும் முன்னிறுத்துகிறார்கள். இதுபோன்ற சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த அவலம் இதுபோன்று வேறு யாருக்கும் நிகழ கூடாது என்பதை அடிப்படையாக வைத்து புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். இந்த புகார் என்பது கொடுக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இதுபோன்ற வழக்குகளில் பாலியல் குற்றச்சாட்டுகளில் உள்ளான  போது பாதிக்கப்பட்டவருடைய விவரங்கள் என்பது வெளிவர கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

ஆனால் இந்த உச்சநீதிமன்ற அறிவிப்பையும் தாண்டி காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் முழு விவரங்களையும் வெளியிட்டு இருக்கிறது. இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள், அமைப்புகள், பெண்ணியல் செயல்பாட்டாளர்கள் என அனைவரும் கடுமையாக பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள். இந்த செயல் என்பது கூட இனிமேல் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருபோதும் வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த அவலத்தை சொல்ல கூடாது என்பதனை மறைமுகமாக காவல்துறை சொல்கிறது என்பது பல்வேறுடைய கருத்தாக இருக்கிறது. இந்த தகவலை வெளியிட்ட கோவை மாவட்ட காவல்துறை எஸ்.பி பாண்டியராஜனுக்கு கடுமையான கண்டனம் எழுந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் மகளிர் ஆணையம் சார்பில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. எதற்காக இந்த பெண்ணினுடைய பெயரை குறிப்பிட்டீர்கள் என்ற கேள்வியை முன்னிறுத்து மகளிர் ஆணையம் எஸ்.பி-க்கு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்